Thu ,Jul 18, 2024

சென்செக்ஸ் 80,716.55
51.69sensex(0.06%)
நிஃப்டி24,613.00
26.30sensex(0.11%)
USD
81.57
Exclusive

பிரபல நடிகை வீட்டில் தீ விபத்து... ரசிகர்கள் ஷாக்!

UDHAYA KUMAR Updated:
பிரபல நடிகை வீட்டில் தீ விபத்து... ரசிகர்கள் ஷாக்!Representative Image.

சென்னையில் வசித்து வரும் பிரபல நடிகை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் எந்த ஆபத்தும் இல்லை என்றாலும் சற்று பொருட்சேதம் ஏற்பட்டிருப்பதாக தகவல்

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் முதல் தெருவில் வசித்து வருகிறார் பிரபல தமிழ் நடிகை கனகா. இவர் கரகாட்டக் காரன் படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். 

இவரது நடிப்பில் அதிசயபிறவி, கோயில் காலை, சாமுண்டி உள்ளிட்ட பல படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளன. 90களின் கதாநாயகிகளில் இவருக்கு தனி இடம் உண்டு. ரஜினி, ராமராஜன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியுள்ள இவரது வீட்டில் நேற்று திடீரென தீப் பிடித்து எரிந்தது. 

தகவல் கிடைத்து வந்த தீ அணைப்பு படையினர் கனகா வீட்டுக்குள் செல்ல அவர் அனுமதிக்காமல் வாசலிலேயே வைத்து சண்டையிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பூஜை அறையில் தீ பிடித்ததால் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லையாம். 

நல்லவேளையாக அவர்கள் கனகாவை சமாதானப்படுத்திவிட்டு உள்ளே சென்று தீயை அணைத்துள்ளனர். இல்லையென்றால் என்ன நடந்திருக்கும் என்பதை கூறவே முடியாது என அக்கம்பக்கத்தினர் கூறியிருந்தனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்