தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இன்று டெல்லியில் நடக்கும் நிலையில், அதில் பங்கேற்க சிறந்த நடிகருக்கான விருது பெரும் நடிகர் சூர்யா குடும்பத்துடன் டெல்லி சென்றுள்ளார்.
சூர்யா நடிப்பில் கடந்த 2020ல் வெளியான சூரரை போற்று திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்திற்கு 5 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. அதில் நடித்த நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று மாலை டெல்லியில் நடக்கும் 68வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் இருந்து சிறந்த நடிகருக்கான தேசிய விருதை அவர் பெறுகிறார். இது அவருக்கு முதல் தேசிய விருது என்பதால், இந்த சிறப்பான தருணத்தை கொண்டாட குடும்பத்துடன் டெல்லி சென்றுள்ளார்.
நடிகர் சூர்யா, மனைவி ஜோதிகா, மகன் தேவ், மகள் தியா ஆகியோர் டெல்லி செல்ல சென்னை விமான நிலையத்திற்கு வந்தபோது எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சூரரைப் போற்று திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த நடிகை அபர்ணா சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெறுகிறார். மேலும் சிறந்த பின்னணி இசைக்காக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், சிறந்த திரைக்கதைக்காக இயக்குனர் சுதா கொங்கரா ஆகியோரும் விருது பெருகின்ற்னனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…