Mon ,Sep 26, 2022

Exclusive

கதாநாயகியாகிறார் கேப்ரியல்லா!

Udhayakumar December 05, 2021
Representative Image. Representative Image.

விஜய் தொலைக்காட்சியில் குழந்தைப் பருவத்திலிருந்தே வருபவர் கேப்ரியல்லா. தனது தந்தையுடன் சேர்ந்து டான்ஸ் நிகழ்ச்சியில் வந்தவர் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளிலும் தனது இருப்பை பதிவு செய்தார். பின் பிக்பாஸ் என்ட்ரி மூலம் டீன் ஏஜ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.


பிக்பாஸில் வந்த கேப்ரியல்லா பெரிய அளவில் கண்டென்ட் கொடுக்காமலிருந்தாலும்கூட விஜய் டிவி பிரபலம் என்பதால் பலமுறை காப்பாற்றப்பட்டிருந்தார். இந்நிலையில்தான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஒரு தொடரில் முழுநேர கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார் கேப்ரியல்லா


விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான தொடர்களில் ஒன்று ஈரமான ரோஜாவே. மெகா தொடராக ஒளிபரப்பான இந்த ஈரமான ரோஜா கடந்த சில மாதங்களுக்கு முன் உதிர்ந்தது. எபிசோட்கள் நீட்டப்படாமல் முடிவுக்கு வந்த இந்த தொடரின் ரசிகர்களுக்கு இன்னொரு சர்ப்ரைஸ் காத்திருந்தது.

ஈரமான ரோஜாவே சீரியலின் அடுத்த பாகம் விரைவில் தொடங்கவிருக்கிறதாம். இதில் கதாநாயகியாக நடிக்க கேப்ரியல்லா ஒப்பந்தமாகியுள்ளார் என தகவல் வந்துள்ளது. முதல் முறையாக ஒரு தொடரில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் கேப்ரியல்லா

Tag: Gabriella Hot Images | Gabriella Charlton | Gabriella Charlton Age | Gabriella Charlton Instagram | Gabriella Hot.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

Related Posts