Sat ,Jun 03, 2023

சென்செக்ஸ் 62,846.38
344.69sensex(0.55%)
நிஃப்டி18,598.65
99.30sensex(0.54%)
USD
81.57
Exclusive

Gatta Kusthi Movie Review : பொண்டாட்டியை அடக்க போய்...போட்டியில் தவிக்கும் கணவன்..! கட்டா குஸ்தி விமர்சனம்..!

Manoj Krishnamoorthi Updated:
Gatta Kusthi Movie Review : பொண்டாட்டியை அடக்க போய்...போட்டியில்  தவிக்கும் கணவன்..! கட்டா குஸ்தி  விமர்சனம்..!Representative Image.

மக்கள் சினிமாவில் எதிர்பார்ப்பது புதிய கதைக்களம் மற்றும் புதிய பரிமாணம் ஆகும். தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் வழக்கமான பாணியில் கோலிவுட்டில் திரிந்தாலும், சில இயக்குநர்களின் புதுப்புது கதைகள் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. புதுவிதமான கதையில் கலகலப்பான கதை கொண்ட கட்டா குஸ்தி (Gatta Kusthi Movie Review) திரைப்படம் எப்படி உள்ளது..? படத்தில் இருக்கும் சுவாரஸ்யம் என்ன...? என்பதை காண்போம். 

Gatta Kusthi Movie Review : பொண்டாட்டியை அடக்க போய்...போட்டியில்  தவிக்கும் கணவன்..! கட்டா குஸ்தி  விமர்சனம்..!Representative Image

கதைக்களம் (Gatta Kusthi Story In Tamil)

பொள்ளாச்சியில் தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்யும் அதிக படிக்காத கதாநாயகன். பாலக்காட்டு "கட்டா குஸ்தி" வீராங்கனையான கல்லூரி படிக்கும் கதாநாயகி. இவர்கள் இருவரின் திருமணத்திற்கு பிறகு ஏற்படும் கலாட்டா தான் கட்டா குஸ்தி திரைப்படத்தின் மையக் கதையாகும். 

Gatta Kusthi Movie Review : பொண்டாட்டியை அடக்க போய்...போட்டியில்  தவிக்கும் கணவன்..! கட்டா குஸ்தி  விமர்சனம்..!Representative Image

திரை பார்வை (Gatta Kusthi Movie Review In Tamil)

அதிகம் படிக்காமல் தனக்கு சொந்தமான 20 ஏக்கரில் விஷ்ணு விசால் விவசாயம் செய்து வருகிறார். பல இடங்களில் திருமணத்திற்காக பெண் தேடுகிறார், இவரின் கல்யாண கண்டிஷன் ஒன்றுள்ளது. தனக்கு வரப்போகும் மனைவி தன்னை விட குறைவாக படித்திருக்க வேண்டும், நீளமான முடி இருக்க வேண்டும் என்பதாகும். 

திரைக்கதையில் ட்விஸ்டே இங்கு தான் ஆரம்பிக்கிறது, தமிழகத்தில் பெண் கிடைக்காமல் போக கேரளா செல்கிறார். அதே வேளையில் அடாவடியான கட்டா குஸ்தி வீராங்கனையான ஜஸ்வரிய லெக்‌ஷ்மிக்கு தமிழக மாப்பிள்ளை தேடுகின்றனர். இதனால் குறைவான முடியை வைத்திருக்கும் குஸ்தி வீராங்கனையை அதிகம் படிக்காதவர் எனக் கூறி கல்யாணம் செய்து வைக்கின்றனர்.

Gatta Kusthi Movie Review : பொண்டாட்டியை அடக்க போய்...போட்டியில்  தவிக்கும் கணவன்..! கட்டா குஸ்தி  விமர்சனம்..!Representative Image

கருணாஸ் பேச்சை கேட்டு மனைவியை தன் கட்டுப்பாட்டில் வைக்க விஷ்ணு விஷால் செய்யும் வேலைகள் மற்றும் கருணாஸின் ஐடியா போன்றவை யதார்த்தமான நகைச்சுவை ஆகும். மனைவி சுய உருவம் எப்போது விஷ்ணு விசாலுக்கு தெரியும் என்பது நம்மை சீட் நுணியில் அமர வைக்கிறது. 

மாமா கருணாஸின் பிற்போக்கு கருத்தை  எடுத்து மனைவி கட்டுப்படுத்த நினைக்கும்போது ஐஸ்வரியா எடுக்கும் முடிவு தான் படத்தை அடுத்த கட்டாத்திற்கு கொண்டு செல்கிறது. 

Gatta Kusthi Movie Review : பொண்டாட்டியை அடக்க போய்...போட்டியில்  தவிக்கும் கணவன்..! கட்டா குஸ்தி  விமர்சனம்..!Representative Image

திரைக்கதை முழுவதும் ஐஸ்வரிய லெக்‌ஷ்மி சுற்றியே நகர்கிறது, இவரின் நடிப்பு நமக்கு எளிதில் கேரள பெண் கீர்த்தி கேரக்டரை மனதில் பதிய வைக்கிறது. முதல் பகுதியை கலகலப்பாக கொண்டு சென்று இரண்டாம் பகுதியில் நல்ல கருத்தை செண்டிமெண்டாக சேர்த்துள்ளது படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. 

நகைச்சுவை ட்ரேக் தான் திரைப்படத்தின் மிகப்பெரிய ப்ளஸாக ஆகும். கருணாஸ், முனிஷ்காந்த், காளி வெங்கட், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் காமெடி கவரும் வகையில் உள்ளது. படத்தின் பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு திரைப்படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ் ஆகும். 

Gatta Kusthi Movie Review : பொண்டாட்டியை அடக்க போய்...போட்டியில்  தவிக்கும் கணவன்..! கட்டா குஸ்தி  விமர்சனம்..!Representative Image

Gatta Kusthi Movie Review:

திரைக்கதை- 4/5

கதை- 3.75/5

இசை- 4 /5

நகைச்சுவை- 3.75/5

ஒளிப்பதிவு- 3.75/ 5

இயக்கம்- 4/5

கலகலப்பான பாணியில் ஒவ்வொரு தனிமனிதனும் உணர வேண்டிய கருத்தை காட்சிப்படுத்தியது சிறப்பு. மொத்தத்தில் குடும்பத்துடன் சேர்ந்து நேரத்தை செலவிட தகுந்த பக்க பொழுதுபோக்கு தளம் கட்டா குஸ்தி ஆகும்.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்