தமிழில் கிட்டத்தட்ட 50 படங்களில் நடித்து, தனி ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளவர் ஹன்சிகா. இவரது திருமணம் குறித்த தகவல்கள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகியது.
பல்வேறு ரூமர்களுக்குப் பிறகு, ஹன்சிகா தனது நீண்ட கால நண்பரை கரம் பிடிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். அதாவது, தொழிலதிபரான சோஹைல் கதுரியா என்பவர் வரும் டிசம்பர் மாதத்தில் ஹன்சிகாவை திருமணம் செய்ய உள்ளார்.
இவர்களது திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்காக, பழைமையான அரண்மனையைத் தற்போது புதுப்பித்து வருவதாகவும் கூறப்படுகிறது. எல்லோராலும் எதிர்பார்க்கப்படும் ஹன்சிகாவின் திருமணம் டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும், இதற்கான கொண்டாட்டங்கள் டிசம்பர் 2 ஆம் தேதியே தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.
இருப்பினும், இவரைத் திருமணம் செய்யும் அந்த அதிர்ஷ்டசாலி யார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில், இன்று அவர்களின் ரொமேண்டிக் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஹன்சிகா.
பாரிசில் உள்ள ஈபிள் டவர்ஸ் பின்பக்கம் உள்ளவாறு, இவர்களது ரொமேன்டிக் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதில், ஹன்சிகா தனது உச்சகட்ட மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது போல போஸ் கொடுத்திருக்கிறார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…