உலகளவில் புகழ்பெற்ற ஆங்கில நாவல் ஹாரிபாட்டர். ஏழு புத்தகங்களாக வெளிவந்த ஹாரிபாட்டர் நாவல் திரைப்படமாக 8 பாகங்களாக வெளிவந்தது. ஹாரிபாட்டர் திரைப்படங்களுக்கு உலக அளவில் ரசிகர்கள் ஏராளம். இந்த திரைப்படத்தில் ரூபியஸ் ஹஹ்ரிட் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ஸ்காட்லாந்து நடிகர் ரூபி கால்ட்ரனி.
72 வயதான ரூபி காலட்ரனி வயது மூப்பின் காரணமாக உடல் நலக்குறைவினால் ஸ்காட்லாந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சில காலமாக சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். இவருடைய மறைவு ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…