தமிழ் சினிமாவில் தரமான படங்கள் அவ்வப்போதுதான் வருகிறது என்றாலும், ரசிகர்கள் குறிப்பிட்ட படம் எத்தனை கோடி வசூல் செய்கிறது, அதில் யார் படம் வெற்றி பெற்றது, வசூல் ரீதியாக வென்ற படம் எது என்றே பேசி சண்டை போட்டுக்கொள்கிறார்கள். படம் சரியாக விமர்சனங்களைப் பெறாவிட்டாலும்கூட, பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்து காணப்படுவதால், திரையரங்குகளில் ஓரிரு வாரங்கள் வெற்றிகரமாக ஓடிவிடுவதால், போட்ட முதலை தயாரிப்பாளர்கள் எடுத்து விடுகிறார்கள்.
2022ம் ஆண்டு வெளியான 3 படங்கள் அடுத்தடுத்து 200 கோடி ரூபாய் வசூலைக் கடந்து, ஹாட்ரிக் வெற்றியடைந்துள்ளன. முதல் படமாக விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் 200 கோடி வசூலைத் தாண்டியது. அடுத்ததாக உலகநாயகனின் விக்ரம் திரைப்படம் 200 கோடியைத் தொட்டது. அந்த படம் உலகம் முழுக்க 600 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்திருப்பதாக தகவல்.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் 1 படமும் 200 கோடியைத் தாண்டி இப்போது 300 கோடியை நோக்கி வெற்றி நடை போட்டு வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…