Thu ,Apr 18, 2024

சென்செக்ஸ் 73,247.91
304.23sensex(0.42%)
நிஃப்டி22,266.95
119.05sensex(0.54%)
USD
81.57
Exclusive

இந்தியன் 2 பட பட்ஜெட் இத்தனை கோடிகளா? கமல்ஹாசனோட கிராஃப் வேற லெவல்ல்ல்ல்ல

UDHAYA KUMAR November 04, 2022 & 16:33 [IST]
இந்தியன் 2 பட பட்ஜெட் இத்தனை கோடிகளா? கமல்ஹாசனோட கிராஃப் வேற லெவல்ல்ல்ல்லRepresentative Image.

ஷங்கர் - கமல்ஹாசன் இரண்டாவது முறையாக சேரும் இந்தியன் 2 படம் படப்பிடிப்பு துவங்கி பல பிரச்னைகளால் இடைநிறுத்தப்பட்டு, ஷங்கர் வேறு படத்துக்கே சென்றுவிட்டார். லைகா தயாரிப்பில் உருவான இந்த படம் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாமல் போக, இடையில் வந்தார் உதயநிதி ஸ்டாலின். முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு இந்தியன் 2 படத்தை மீண்டும் எடுக்க முடிவு செய்தார். 

இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக படப்பிடிப்பு நடந்து வருகின்றது. கமல்ஹாசன் இதுவரை 20 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். ஷங்கர் மொத்தம் 120 நாட்கள் ஏற்கனவே படப்பிடிப்பு நடத்தியிருந்தார், இப்போது 40 நாட்கள் வரை இந்தியன் படப்பிடிப்பு நடந்துள்ளது. 

ஷங்கர் மாதத்தில் 15 நாட்கள் என இந்தியன் 2 படப்பிடிப்பை நடத்தி, அதில் 10 நாட்கள் கமல்ஹாசனை வைத்தும் 5 நாட்கள் மற்ற நடிகர்களை வைத்தும் நடத்தி முடிக்கவும், மிச்சமிருக்கும் 15 நாட்கள் மற்ற பணிகள் நடக்கும் எனவும் கூறப்படுகிறது. இப்படி வரும் ஜனவரி மாதம் படப்பிடிப்பு முழுவதையும் நடத்தி முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம். 

இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் மொத்த பட்ஜெட் விவரங்கள் வெளியாகியுள்ளன.  231 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படம் தயாராகி வருகிறது. அதில் 150 கோடி கமல்ஹாசன், ஷங்கர், காஜல் அகர்வால் உட்பட மற்றவர்களின் சம்பளமாகவே சென்றுவிடுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்