சென்னை: நடிகர் சத்யராஜ், சிபிராஜ் நடிப்பில் உருவாகி வரும் ஜாக்சன் துரை-2 படப்படிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சத்யராஜ், சிபிராஜ், நடிகை பிந்து மாதவி, யோகிபாபு, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன் நடிப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான ஜாக்சன் திரைப்படம் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. ஹாரர் கலந்த கமெடி படமாக உருவான இத்திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.
இதைத்தொடர்ந்து இரண்டாம் பாகம் தொடங்க முடிவு செய்யப்பட்டு தரணிதரன் இயக்கத்தில் சிபிராஜ், சத்யராஜ் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்படிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாகவும், விரைவில் டீசர், ரிலீஸ் தேதி உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகும் எனத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…