சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "ஜெயிலர்" படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர். இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது, அனிருத் அவர்கள் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சிவ ராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சுனில், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், மிர்னா, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட முக்கிய பிரபலங்களும் நடித்துள்ளனர்.
இதனால் மக்கள் மத்தியில் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் சன் பிக்சர்ஸ் ட்விட்டரில் ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10, 2023 உலகளவில் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் மிகப்பெரிய பேன் இந்தியா படமாக மொத்தம் 5 மொழியில் வெளியாக உள்ளது.
ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் இறுதியில் நிறைவு பெற்றதாகவும், படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் வேலைகள் நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இத்துடன் படத்தில் நடித்த கதாபாத்திரங்களின் லுக்கை வெளிப்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களுக்கு பெரும் ட்ரீட்டாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…