Wed ,Feb 01, 2023

சென்செக்ஸ் 59,330.90
-874.16sensex(-1.45%)
நிஃப்டி17,604.35
-287.60sensex(-1.61%)
USD
81.57
Exclusive

ஹாலிவுட் வாங்க.. படம் பண்ணலாம்.. ராஜமௌலிக்கு ஜேம்ஸ் கேமரூன் அழைப்பு!!

Sekar Updated:
ஹாலிவுட் வாங்க.. படம் பண்ணலாம்.. ராஜமௌலிக்கு ஜேம்ஸ் கேமரூன் அழைப்பு!!Representative Image.

இந்தியாவின் பெரிய இயக்குனரான எஸ்.எஸ்.ராஜமௌலி மற்றும் ஹாலிவுட்டின் பெரிய இயக்குனரான ஜேம்ஸ் கேமரூன் ஆகிய இருவரும் சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவின் பின்னணியில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 

இந்த வீடியோவை ஆர்ஆர்ஆர் படக்குழு பகிர்ந்துள்ள நிலையில், இருவரும் பேசிக்கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

அதில் ஆர்ஆர்ஆர் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, ஜேம்ஸ் கேமரூன் எஸ்எஸ் ராஜமௌலியை ஹாலிவுட்டில் படங்களை எடுக்க வருமாறு அழைப்பு விடுத்தார். 

அவர்களின் உரையாடலின்போது, ராஜமௌலி ஹாலிவுட்டில் ஒரு திரைப்படத்தை உருவாக்க விரும்பினால், தன்னையும் அதில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

ஜேம்ஸ் கேமரூன் ராஜமௌலியின் திரைப்படமான ஆர்ஆர்ஆர் பற்றிய தனது கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார். மேலும் இசையமைப்பாளர் எம்எம் கீரவாணியின் பணிக்காக அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்