Fri ,Jun 09, 2023

சென்செக்ஸ் 62,547.11
118.57sensex(0.19%)
நிஃப்டி18,534.10
46.35sensex(0.25%)
USD
81.57
Exclusive

ஜூனியர் NTR பிறந்தநாள் ஸ்பெஷல்...NTR30 வெறித்தனமான பஸ்ட் லுக் போஸ்டர் | Jr NTR’s First Look Poster

Priyanka Hochumin Updated:
ஜூனியர் NTR பிறந்தநாள் ஸ்பெஷல்...NTR30 வெறித்தனமான பஸ்ட் லுக் போஸ்டர் | Jr NTR’s First Look PosterRepresentative Image.

இன்று ஜூனியர் NTR அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் "தேவாரா" படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

ஜூனியர் என்டிஆர் அவர்கள் தனது அடுத்த படம் NTR30 "தேவாரா"வின் பஸ்ட் லுக் போஸ்டரை அதிகாரபூர்வமாக நேற்று ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். 2016 ஆம் ஆண்டு ஜனதா கேரேஜ் படத்திற்கு பின்னர் கொறடாலா சிவா உடன் இணைகிறார் ஜூனியர் என்டிஆர். இப்படத்தில் ஜானவி கபூர் மற்றும் சைஃப் அலி கான் ஆகியோர் நடிக்கின்றனர். வதந்திகள் அடிப்படையில் இப்படத்தில் ஜூனியர் என்டிஆர் அவர்கள் தந்தை, மகன் இருவேடங்களில் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.

Image

போஸ்டரை வைத்து பார்க்கையில் படம் கடற்கரைப் பகுதியின் பின்னணியில் இருக்கலாம். மேலும் ஜூனியர் என்டிஆர் இரத்தம் தோய்ந்த ஈட்டியை பிடித்துக்கொண்டிருப்பது போல காட்சியளித்துள்ளது. இதனை பார்க்கும் போது படத்தில் அசத்தலான ஆக்ஷன் காட்சிகள் இடம்பெற்றிருக்கும் என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்த இப்படம் 5-04-2024-இல் உலகளவில் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்