இந்தியன்-2 படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வரும் கமல்ஹாசன், விஜய் டி.வி நிகழ்ச்சியிலும் தொகுப்பாளராக பங்கு பெற்று வருகிறார். இதற்கிடையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இயக்குனர் விஸ்வநாத்தை சந்திக்க ஐதராபாத் சென்றிருந்தார். மேலும் அங்கு சில நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு, நேற்று மதியம் சென்னை திரும்பியுள்ளார்.
இந்தநிலையில் நேற்று இரவு அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில், லேசான காய்ச்சல் காரணமாக தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கமல் தற்போது நலமாக இருப்பதாகவும், விரைவில் வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…