லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் பாசிடிவ் ரிவியூக்களைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதிகாலை 4 மணிக்கே வெளியான படத்தை காண தமிழகம் மட்டுமின்றி, கேரளா, பெங்களூர், ஆந்திர, தெலுங்கானா பகுதிகளிலுள்ள தியேட்டர்களை ரசிகர்கள் ஆக்கிரமித்தனர். அந்த அளவுக்கு ரசிகர்கள் வந்திருந்த நிலையில் அவர்கள் அனைவரையும் திருப்தி படுத்தியுள்ளது படக்குழு.
கமல்ஹாசன் ஸ்க்ரீன் பிரசென்ஸ், விஜய் சேதுபதி, பஹத், கமல் என அனைவரது ஆக்ஷன் சீக்குவன்ஸ் எல்லாமே வேற லெவலுக்கு இருக்கிறது. படத்தில் சூர்யா வரும் போர்சன் எல்லாம் இதுவரை இந்திய சினிமாவிலேயே இல்லாத வகையில் எடுக்கப்பட்டுள்ளது. சர்ப்ரைஸாக கைதி திரைப்படம் குறித்த தகவல்களும் இணைந்து நம்மை பரவசப்படுத்துகின்றன. இன்று முதல் நாள் வசூல் நல்லமுறையில் வந்துள்ளதால், வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு இன்னும் நிறைய கூட்டம் வரும், வசூல் அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கமல்ஹாசன் அடுத்து யாருடைய இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதை அவரே ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் அடுத்த படம் தயாராகவுள்ளது. மாலிக் என்ற அற்புதமான படத்தை பஹத் பாசிலை வைத்து கொடுத்தவர் மகேஷ் நாராயணன். கமல்ஹாசனுடன் நெருங்கி பழகுபவர் இவர் என்பதால், மீண்டும் ஒரு ஃபேன்பாய் சம்பவம் லோடிங் என்பதையே இது உணர்த்துகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…