பிக் பாஸ் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 6 இன்று முதல் தொடங்கியது. இதன் முதல் நிகழ்வாக, பிக் பாஸ் வீட்டில் வசிக்கக் கூடிய பிக் பாஸ் போட்டியாளர்கள் வரவேற்கப்படுகின்றனர். இதில் முதல் போட்டியாளராக ஜிபி முத்து வந்துள்ளார். ஜிபி முத்துனு சொன்னாவே எல்லாருக்கும் முதலில் ஞாபகம் வருவது "ஏலே செத்தப்பயலே"-ன்ற டயலாக் தான்.
ஜிபி முத்துவுக்கு தனி ஒரு ஃபேன் பேஜே இருக்கு. ஜிபி முத்து பிக் பாஸ் வீட்டுக்கு வந்த உடனே, ஜிபி முத்து ரசிகர்களுக்கே அந்த அளவுக்கு சந்தோஷம். ஜிபி முத்து உள்ள வந்த உடனே, கமல் வரவேற்புலாம் முடித்து பிக் பாஸ் வீட்டுக்கு பயந்துக்கிட்டே உள்ள போறாரு. பிக் பாஸ் வீட்ட பாத்துட்டு ஜிபி முத்துவுக்கு ஒரே பயம். எங்கடா ஆலே இல்ல. இப்படி தனியா விட்டுட்டாங்களேனு ஒரே பொலம்பல். இப்படி ஜிபி முத்து தனியா பொலம்பிட்டு இருக்கும் கமல் ஒரு காமெடி பன்றாரு. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு யாரும் பிக் பாஸ் வீட்டுக்குள் வர மாட்டாங்கனு கமல் சொல்றாரு. இதுக்கு ஜிபி முத்து, துணைக்கு ஆள் இல்லாமல் கழிவறைக்குக் கூட செல்வதில்லைனு பொலம்பிட்டு இருக்காரு. இதுக்கு கமலும், அவரோட ரசிகர்களுக்கும் சிரிப்பு அடக்க முடியல.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…