தமிழ் சினிமா என்றாலே கேரள மாநில மக்களுக்கு மிகவும் பிடிக்கும். காரணம் மலையாளத்தில் கதைகளுக்கு முக்கியத்துவம் கொண்ட படங்கள் மட்டுமே வெளியாகும். ஆக்ஷன், மசாலா, கதாநாயகனுக்கு முக்கியத்துவம் கொண்ட படங்கள் பெரிய அளவில் வெளியாகாது. அப்படி மலையாள நடிகர்களை அவர்கள் பார்ப்பதும் கிடையாது. ஆனால், தமிழ் நடிகர்களுக்கு மிக மிக முக்கியம் கதாநாயக பிம்பம்தான்.
தமிழில் விஜய், விக்ரம், சூர்யா ஆகியோருக்கு மலையாளத்தில் மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனுக்கும் பயங்கரமான பேன்ஸ் பட்டாளம் இருக்கிறது. இவர்களின் படங்கள் பெரும்பாலும் ஆக்ஷன் ரீதியான படங்களாக இருக்கும். இதில் சூர்யா மட்டும் கொஞ்சம் நடிப்புக்கு கதைக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களை தேர்ந்தெடுப்பது வழக்கம். இவர் கடைபிடிக்கும் பாணி கமல்ஹாசனின் பாணி என்றும் சொல்வதுண்டு.
கமல்ஹாசன் மிக ஆரம்ப கால கட்டத்தில் மலையாளத்தில் மிகப் பெரிய நடிகர். இப்போதுள்ள துல்கர் சல்மான், பஹத் பாசில் போன்ற நடிப்பின் நாயகனாக உயர்ந்து நின்றவர். சமகாலத்தில் மோகன்லால், மம்மூட்டிக்கு ஈடு கொடுத்து நடித்துக் கொண்டிருந்தவர். பின்னாளில் தமிழில் மிக அதிக கவனம் எடுத்துக் கொண்டு இங்க சூப்பர் ஸ்டார் ஆனார். அந்த வகையில் மலையாளத்தில் படங்களை குறைத்துக் கொண்டார். ஒரு கட்டத்துக்கு மேல் எக்ஸ்பெரிமண்ட் செய்கிறேன் என புது புது முயற்சிகளை கையாண்டு தனது பழைய மாஸை குறைத்துக் கொண்டார்.
சினிமா உலகில் கமல்ஹாசனின் தோல்விப் படங்கள் கூட (வசூல் இல்லை என்றால் அது தோல்வி படமாம்) பல இயக்குநர்களுக்கு பால பாடமாக அமைந்துள்ளது. இந்த வகையில் கமல்ஹாசன் தமிழ் படங்கள் நடிக்கத் தொடங்கி பெரிய பெரிய ஹிட் கொடுத்தும், பின்னர் கண்டென்ட் படங்கள் செய்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடமும் பிடித்தார்.
சமீபத்தில் வெளியான தகவலின் அடிப்படையில், கமலுக்கு மலையாள மக்களின் அன்பு இன்றும் அப்படியே இருப்பது தெரியவந்துள்ளது.
ரஜினி, விஜய் படங்களை பீட் செய்து விக்ரம் திரைப்படம் வசூலில் டாப்பாக இருக்கிறது.
1. விக்ரம்
2.2.0
3. பிகில்
4. ஐ
5. மெர்சல்
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…