Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

தளபதி 67ஐத் தயாரிக்கும் கமல்ஹாசன்.. இது என்னப்பா டுவிஸ்ட்டு..?

UDHAYA KUMAR November 18, 2022 & 15:43 [IST]
தளபதி 67ஐத் தயாரிக்கும் கமல்ஹாசன்.. இது என்னப்பா டுவிஸ்ட்டு..?Representative Image.

விஜய் தற்போது பரபரப்பாக உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை கமல்ஹாசனும் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தளபதி 67 படத்தை லலித் தயாரிக்கவுள்ளதாகவும், அதனை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்துது. எனினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. வாரிசு படத்தைத் தொடர்ந்தே இந்த தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது. 

தளபதி 67 படத்தின் ஆரம்ப கட்ட வேலைகளை இயக்குநர் லோகேஷ் துவங்கிவிட்டதாகவும், டிசம்பர் 2வது வாரம் முதல் விஜய் படப்பிடிப்புக்கு தயாராவார் எனவும் கூறப்பட்ட நிலையில், கமல்ஹாசனும் இந்த படத்தில் கேமியோ செய்ய இருக்கிறார் என்கிறார்கள். 

இந்த படமும் LCU எனப்படும் லோகேஷ் சினிமா உலகத்தைச் சேர்ந்ததுதான் என்று கூறும் அவர்கள் இந்த படத்தை கமல்ஹாசன் தனது RKFI பட நிறுவனம் மூலம் இணைந்து தயாரிக்கவுள்ளாராம். லலித்துடன் சேர்ந்து இந்த படத்தை தயாரிக்கும்போது கேமியோ அப்பியரன்ஸ் செய்யவுள்ளாராம். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமாம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்