உத்தமவில்லன் படத்துக்கு பிறகு தொழில் நஷ்டமடைந்த லிங்குசாமி மீண்டு வர முடியாமல் தவித்து வருகிறார். இதனால் அவருக்கு எப்படியாவது ஒரு பிரேக் வேண்டும் என பலரும் பேசி வருகின்றனர். கமல்ஹாசனே அவரை அழைத்து ஓரிரு முறை பேசியிருக்கிறாராம். அப்படி பேசும்போது நிச்சயமாக உங்கள் கம்பெனிக்கு ஒரு படம் பண்ணித் தரேன் என்றிருக்கிறார்
கமல்ஹாசனின் நண்பர் ரமேஷ் அரவிந்த் இயக்கிய உத்தமவில்லன் திரைப்படம் வசூல் ரீதியாக படுதோல்வியடைந்தது. இந்த படத்துக்கு மீறிய பட்ஜெட்டை தேர்வு செய்ததுதான் பிரச்னை என்றார்கள். இதனை ஈடுகட்டும் பொருட்டு கமல்ஹாசனே லிங்குசாமி நிறுவனத்துக்கு படம் பண்ணி கொடுக்க இருக்கிறார். அந்த படத்தை இயக்குவது லிங்குசாமி இல்லை.
ஏற்கனவே ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் மகேஷ்நாராயணன் இயக்கத்தில் ஒரு படம் கமல்ஹாசன் நடிப்பதாக இருந்தது. கமல்ஹாசனின் தொடர் லைன் அப் காரணமாக அந்த படத்தை இப்போதைக்கு ஒத்திவைத்திருக்கின்றனர். ஆனால் இதே படத்தில் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தையும் சேர்த்துக் கொள்வது என கமல்ஹாசன் யோசித்து வருகிறாராம்.
ஒருவேளை இந்த படம் இல்லை என்றால், ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் போடப்பட்ட இன்னொரு படத்தில் லிங்குசாமியைச் சேர்த்துக் கொள்ளலாம் என கமல் திட்டம் போட்டிருப்பதாக கூறப்படுகிறது. எப்படியும் நிச்சயமாக அவருக்கு லாபம் வரும் வகையில் ஏதாவது ஒன்றை செய்யத் தயாராக இருக்கிறார் கமல்ஹாசன்.
மணிரத்னம் படத்துக்கு முன்னதாகவே இந்த படத்தை சுருக்கமாக முடித்துவிட திட்டம் இருக்கிறதாம். இந்தியன் 2 முடித்த கையோடு, ஒரு சின்ன படம் அடுத்து மணிரத்னம் படம். அதைத் தொடர்ந்து ஒரு சின்ன படம். பின் ராஜமவுலியுடன் ஒரு படம் என திட்டம் வேற லெவலில் இருக்கிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…