Sat ,Sep 23, 2023

சென்செக்ஸ் 66,009.15
-221.09sensex(-0.33%)
நிஃப்டி19,674.25
-68.10sensex(-0.34%)
USD
81.57
Exclusive

கம்பன் சொல்ல வந்து பாடல் வரிகள் - சீதா ராமம்... | Kamban Solla Vanthu Song Lyrics in Tamil

Nandhinipriya Ganeshan September 26, 2022 & 08:00 [IST]
கம்பன் சொல்ல வந்து பாடல் வரிகள் - சீதா ராமம்... | Kamban Solla Vanthu Song Lyrics in TamilRepresentative Image.

Kamban Solla Vanthu Song Lyrics in Tamil: இயக்குநர் ஹனு ராகவப்புடி இயக்கத்தில் துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் சீதா ராமம். காஷ்மீரின் கொள்ளை அழகு, இந்தியா பாகிஸ்தான் பிரச்சனைக்கு இடையே ராம் - சீதாவின் காதலும் நாட்டுக்காக ராம் செய்த தியாகமும் அதை தேடி அஃப்ரீன் (ராஷ்மிகா மந்தனா) ஏன் அலைகிறார் என்பதையும் கவிதையாக சொல்லி உள்ள விதம் அழகு. இந்த படம் வெளியாகி மிகவும் குறைந்த நாட்களிலேயே பெரிய அளவில் வெற்றியை அடைந்து, பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வருகிறது. அதுமட்டுமல்லாமல், காதலை வெளிப்பாட்டை கூறும் பாடல்கள் ஒவ்வொன்றும் நம் நெஞ்சங்களை கொள்ளையடித்துவிட்டன. அதில் ஒரு பாடல் “குருமுகில்களை சிறுமுகைகளில் யார் தூவினார் மழைகொண்டு கவிதை தீட்டினார்”. இப்போது இந்த பாடலின் வரிகளை பார்க்கலாம். 

இசை: விஷால் சந்திரசேகர்

பாடல் வரிகள்: மதன் கார்க்கி

பாடியவர்: சாய் விக்னேஷ்

படம்: சீதா ராமம்

 

Kamban Solla Vanthu Song Lyrics in Tamil: 

ஆண்: குருமுகில்களை சிறுமுகைகளில்
யார் தூவினார்
மழைகொண்டு கவிதை தீட்டினார்

ஆண்: இளம்பிறையினை இதழ் இடையினில்
யார் சூட்டினார்
சிரித்திடும் சிலையை காட்டினார்

ஆண்: எறும்புகள் சுமந்து போகுதே
சர்க்கரை பாறை ஒன்றினை
இருதயம் சுமந்து போகுதே
இனிக்கிற காதல் ஒன்றினை

ஆண்: என் சின்ன நெஞ்சின் மீது
இன்ப பாரமே ஏற்றி வைத்ததார்

குழு: குயில் மயில் குயில்கள் காணும் வெண்ணிலா
வானோடு தீட்டி வைத்ததார்
தரை இறங்கி வந்து ஆடுகின்றதே
நிலவை கூட்டி வந்ததார்

ஆண்: கம்பன் சொல்ல வந்து
ஆனால் கூச்சங்கொண்டு
எழுதா ஓர் உவமை நீ
வர்ணம் சேர்க்கும்போது
வர்மன் போதை கொள்ள
முடியா ஓவியமும் நீ

ஆண்: எலோரா சிற்பங்கள்
உன் மீது காதலுறும்
உயிரே இல்லாத கல்கூட காமமுறும்

ஆண்: உன் மீது காதல் கொண்ட
மானுடன் தான் என்ன ஆகுவான்

குழு: குயில் மயில் குயில்கள் காணும் வெண்ணிலா
வானோடு தீட்டி வைத்ததார்
தரை இறங்கி வந்து ஆடுகின்றதே
நிலவை கூட்டி வந்ததார்

ஆண்: உடையால் மூடி வைத்தும்
இமைகள் சாத்தி வைத்தும்
அழகால் என்னை கொல்கிறாய்

ஆண்: அருவி கால்கள் கொண்டு
ஓடை இடையென்றாகி
கடலாய் நெஞ்சம் கொள்கிறாய்

ஆண்: கடலில் மீனாக
நானாக ஆணையிடு
அலைகள் மீதேறி
உன் மார்பில் நீந்தவிடு
பேராழம் கண்டுகொள்ள
ஏழு கோடி ஜென்மம் வேண்டும்

குழு: குயில் மயில் குயில்கள் காணும் வெண்ணிலா
வானோடு தீட்டி வைத்ததார்
தரை இறங்கி வந்து ஆடுகின்றதே
நிலவை கூட்டி வந்ததார்

Also Read: 

கம்பன் சொல்ல வந்து பாடலின் அர்த்தம் - சீதா ராமம்...

'காலங்கள் தாண்டி காத்திருப்பேன்' பாடல் வரிகள் - சீதா ராமம்..

கண்ணுக்குள்ளே கரைந்த நிலவு பாடல் வரிகள் - சீதா ராமம்..

பிரியாதே பாடல் வரிகள் - சீதா ராமம்..

ராமன் செய்த போரே சீதைக்காக தானே - சீதா ராமம்..


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்