Sun ,Apr 21, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை பாடல் வரிகள்..! | Kan Pesum Varthaigal Song Lyrics

Gowthami Subramani Updated:
கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை பாடல் வரிகள்..! | Kan Pesum Varthaigal Song LyricsRepresentative Image.

காதல் தோல்வி பாடல் வரிசையில் ஹிட் அடித்த பாடல்கள் என்றால், அதில் இந்த பாடலும் இடம் பெற்றிருக்கும். 7ஜி ரெயின்போ காலணி திரைப்படம் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த திரைப்படத்தில் ரவி கிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வால் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் சோனியா அகர்வால் மீது உள்ள காதலால் ரவி கிருஷ்ணா பாடிய பாடல் கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை பாடலாகும். இந்தப் பாடல் வரிகளைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

திரைப்படம்: 7ஜி ரெயின்போ காலணி

நடிகர், நடிகை: ரவி கிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வால்

பாடல்: கண் பேசும் வார்த்தைகள்

இசை: யுவன் சங்கர் ராஜா

பாடகர்: கார்த்திக்

எழுதியவர்: நா.முத்துக்குமார்

கண் பேசும் வார்த்தைகள் பாடல் வரிகள் தமிழ்

கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை

ஒரு முகம் மறைய மறுமுகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை
கடல் கை மூடி மறைவதில்லை…

கண்ணாடி இதயம் இல்லை
கடல் கை மூடி மறைவதில்லை…


காற்றில் இலைகள் பறந்த பிறகும்

கிளையின் தழும்புகள் அழிவதில்லை
காயம் நூறு கண்டபிறகும்
உன்னை உள் மனம் மறப்பதில்லை

ஒரு முறைதான் பெண் பார்ப்பதினால்

வருகிற வலி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண் மனம் புரிவதில்லை

 

(இசை)

கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை

ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை
கடல் கை மூடி மறைவதில்லை

 

(இசை)

காட்டிலே காயும் நிலவை

கண்டுகொள்ள யாருமில்லை
கண்களின் அனுமதி வாங்கி
காதலும் இங்கே வருவதில்லை

தூரத்தில் தெரியும் வெளிச்சம்

பாதைக்கு சொந்தமில்லை

மின்னலின் ஒளியை பிடிக்க

மின்மினி பூச்சிக்கு தெரியவில்லை

விழி உனக்கு சொந்தமடி

வேதனைகள் எனக்கு சொந்தமடி

அலை கடலை கடந்த பின்னே
நுரைகள் மட்டும் கரைக்கே சொந்தமடி

 

கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை

ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை
கடல் கை மூடி மறைவதில்லை

 

(இசை)

உலகத்தில் எத்தனை பெண் உள்ளது
மனம் ஒருத்தியை மட்டும் கொண்டாடுது

ஒரு முறை வாழ்ந்திட திண்டாடுது

இது உயிர் வரை பாய்ந்து பந்தாடுது

பனி துளி வந்து மோதியதால்

இந்த முள்ளும் இங்கே துண்டானது

பூமியில் உள்ள பொய்கள் எல்லாம்

அட புடவை கட்டி பெண் ஆனது

ஏ புயல் அடித்தால் மழை இருக்கும்

மரங்களில் பூக்களும் மறைந்து விடும்
சிரிப்பு வரும் அழுகை வரும்
காதலில் இரண்டுமே கலந்து வரும்

ஒரு முறைதான் பெண் பார்ப்பதினால்

வருகிற வலி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண் மனம் புரிவதில்லை
ஹே கண் பேசும் வார்த்தை

 

ஹே கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை

ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை
கடல் கை மூடி மறைவதில்லை

காற்றில் இலைகள் பறந்த பிறகும்

கிளையின் தழும்புகள் அழிவதில்லை
காயம் நூறு கண்ட பிறகும்
உன்னை உள் மனம் மறப்பதில்லை

 

Kan Pesum Varthaigal Lyrics English

Kan pesum vaarthaigal purivadhillai
Kaathirundhaal pen kanivadhillai
Oru mugam maraiya maru mugam theriya
Kannadi idhayam illai
Kadal kai moodi maraivadhillai

Kannadi idhayam illai
Kadal kai moodi maraivadhillai

Kaatril ilaigal parandha piragum
Kilaiyin thazhumbugal azhivadhillai
Kaayam nooru kanda piragum
Unnai ull manam marapadhillai

Oru muraidhan pen paarpadhinaal
Varugira vali aval arivadhillai
Kanavinilum dhinam ninaivinilum
Karaigira aan manam purivadhillai

 

(Music)

Kan pesum vaarthaigal purivadhillai
Kaathirundhaal pen kanivadhillai
Oru mugam maraiya maru mugam theriya
Kannadi idhayam illai
Kadal kai moodi maraivadhillai

 

(Music)


Kaatilae kaayum nilavu
Kandu kolla yarumillai
Kangalin anumadhi vaangi
Kaadhalum ingae varuvadhillai

Dhoorathil theriyum velicham
Paadhaiku sondhamillai
Minnalin oliyai pidika
Minmini poochiku theriyavillai

Vizhi unaku sondhamadi
Vedhanaigal enaku sondhamadi
Alai kadalai kanda pinnae
Nuraigal matum karaikae sondhamadi

Kan pesum vaarthaigal purivadhillai

Kaathirundhaal pen kanivadhillai
Oru mugam maraiya maru mugam theriya
Kannadi idhayam illai
Kadal kai moodi maraivadhillai

 

(Music)

Uzhagathil ethanai pen ulladhu
Manam oruthiyai matum kondadudhu
Oru murai vaazhndhida thindadudhu
Idhu uyir varai paaindhu pandhadudhu

Pani thuli vandhu modhiyadhaal
Indha mullum ingae thundanadhu
Boomiyil ulla poigal ellam
Ada pudavai katti pen aanadhu

puyal adithaal mazhai irukum
Marangalil pookalum maraindhu vidum
Siripu varum azhugai varum
Kaadhalil irandumae kalandhu varum

Oru muraidhaan pen paarpadhinaal
Varugira vazhi aval arivadhillai
Kanavinilum dhinam ninaivinilum
Karaigira aan manam purivadhillai
Hey kan pesum vaarthai


Kan pesum vaarthaigal purivadhillai
Kaathirundhaal pen kanivadhillai
Oru mugam maraiya maru mugam theriya
Kannadi idhayam illai
Kadal kai moodi maraivadhillai

Kaatril ilaigal parandha piragum
Kilaiyin thazhumbugal azhivadhillai
Kaayam nooru kanda piragum
Unnai ull manam marapadhillai


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்