உதயநிதி ஸ்டாலினின் மனைவியும் தமிழ் சினிமா இயக்குநருமான கிருத்திகா உதயநிதி தற்போது ஒரு டிவீட் செய்துள்ளார். அது மிக வேகமாக வைரலாகி வருகிறது. அதற்கு காரணம் அவர் காதலைப் பற்றி பேசியிருப்பதுதான்.
ஜீ5 ஓடிடி தளத்துக்காக பேப்பர் ராக்கெட் எனும் வெப்சீரிஸை இயக்கியிருந்தார் கிருத்திகா உதயநிதி. காளிதாஸ் ஜெயராம், தான்யா ரவிச்சந்திரன், கௌரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த வெப் சீரிஸ் சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இந்த வெப்சீரிஸின் முதல் பாகத்தைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்துக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
உதயநிதியும் கிருத்திகாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். சாதி மதம் தேவையில்லை என உதிர்த்து வெளிவந்து திருமணம் செய்துகொண்டனர். இதனை தன் பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுப்பதை தவறவில்லை.அவர்களைப் பொறுத்தவரை காதலுக்கு எந்த விதத்திலும் நோ சொல்லமாட்டார்கள் என்றே பேசுகிறார்கள்.
சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அந்த நிகழ்வில் ஆனந்த கண்ணீர் பொங்க உதயநிதியைக் கட்டியணைத்து பாராட்டினார்.
இந்நிலையில் தற்போது கிருத்திகா வெளியிட்டுள்ள டிவீட்டில், காதலிக்கவும், அதனை வெளிப்படுத்தவும் பயம்கொள்ளாதீர்கள். இது இயற்கையின் முழு மகிமையையும் பரிந்துகொள்ள ஒரு வழி என பதிவிட்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…