Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

கமல் – ரஜினி படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்? – 18 ஆண்டுகளுக்குப் பின் தமிழ் சினிமாவில் நடக்க உள்ள பரபரப்பு!

Gowthami Subramani Updated:
கமல் – ரஜினி படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்? – 18 ஆண்டுகளுக்குப் பின் தமிழ் சினிமாவில் நடக்க உள்ள பரபரப்பு!Representative Image.

கோலிவுட்டில், தற்போது விஜய் – அஜித் மோதல் தான் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஒன்றாகும். கடந்த சில நாள்களாகவே, விஜய் – அஜித் படங்கள் வெளிவரும் போது ரசிகர்களின் மத்தியில் பெரும் போராட்டமே நிகழும். இந்நிலையில், தற்போது கமல் மற்றும் ரஜினியின் படங்கள் 18 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் மற்றும் ரஜினியின் படங்கள் நேருக்கு நேர் மோத வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

கமல் – ரஜினி படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்? – 18 ஆண்டுகளுக்குப் பின் தமிழ் சினிமாவில் நடக்க உள்ள பரபரப்பு!Representative Image

அதாவது, ரஜினி நடித்த ஜெயிலர் படமும் கமல் நடித்த இந்தியன் – 2 படமும் ஒரே நாளில் வெளிவருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகத் தெரிவிக்கின்றன. கடந்த 2005 ஆம் ஆண்டு கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் படமும், ரஜினி நடித்த சந்திரமுகி திரைப்படமும் ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் வெளியானது. இவற்றில் சந்திரமுகி படமானது மும்பை எக்ஸ்பிரஸ் படத்தை விட ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பைப் பெற்றது.

கமல் – ரஜினி படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்? – 18 ஆண்டுகளுக்குப் பின் தமிழ் சினிமாவில் நடக்க உள்ள பரபரப்பு!Representative Image

அதன் பின்னர், ரஜினி – கமல் படங்கள் ஒரே நாளில் வெளியாக வில்லை. ஆனால், தற்போது ஜெயிலர் படத்தின் ஷூட்டிங்கும், இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளிவர வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், இந்த இரு படங்களுக்குமே ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்