Mon ,Apr 22, 2024

சென்செக்ஸ் 73,694.27
605.94sensex(0.83%)
நிஃப்டி22,362.00
215.00sensex(0.97%)
USD
81.57
Exclusive

வியாபாரத்தில் உழைத்து தன் கனவை நோக்கி நடைபோடும் லெஜண்ட் சரவணன்! இளைஞர்களுக்கு சொன்ன பாடம்...!

UDHAYAKUMAR July 27, 2022 & 10:42 [IST]
வியாபாரத்தில் உழைத்து தன் கனவை நோக்கி நடைபோடும் லெஜண்ட் சரவணன்! இளைஞர்களுக்கு சொன்ன பாடம்...!Representative Image.

பிரபல தொழில் அதிபர் லெஜண்ட் சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள லெஜண்ட் திரைப்படம் நாளை ரிலீஸாகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 5 மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாக இருக்கும் இந்த திரைப்படம் எப்படி இருக்கப் போகிறது என பலரும் விமர்சனங்களுக்காக காத்திருக்கிறார்கள். 

லெஜண்ட் சரவணனும் பல இடங்களில் நடக்கும் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். அதில் பத்திரிக்கையாளர் ஒருவர் இந்த வயதில் நடிக்க வந்துள்ளீர்களே என கேட்டதற்கு, கூலாக அவர் அளித்த பதில்தான் ரசிக்க வைத்தது. 

அமிதாப் பச்சன் கூட இப்போது நடித்துக் கொண்டிருக்கிறார். ரஜினி, சரத்குமார், கமல்ஹாசன் உள்ளிட்டோரும் இப்போது நடிக்கிறார்கள். என்னைவிட அனைவருக்கும் வயது அதிகம். அவர்களிடமும் இதே கேள்வியைக் கேட்பீர்களா என பதிலளித்தார். சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது என் கனவு. அதற்காக நிறைய உழைப்பை போட வேண்டியிருந்தது. வியாபாரத்தில் சம்பாதித்து என் கனவை நோக்கி இப்போது வந்திருக்கிறேன். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்