நம்ம ஊரில் எப்படி லோகேஷ் கனகராஜ், ஹெச் வினோத், நெல்சன் திலீப்குமார் மாதிரி இயக்குநர்கள் இருக்கிறார்கள் அப்படி மலையாளத்தில் டிரெண்டிங்கில் இருக்கும் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. இவர் அடுத்தடுத்து மிகப் பெரிய நடிகர்களை வைத்து படமெடுத்து வருகிறார். அதில் வெற்றியும் பெற்று வருகிறார்.
மலையாளத்தில் அங்கமாலி டையரிஸ், ஈ மா யூ, ஜல்லிக்கட்டு, சுருளி ஆகிய திரைப்படங்கள் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் லிஜோ ஜோஸ். இவரது ஜல்லிக்கட்டு திரைப்படம் இந்தியா சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது. கேரள அரசின் மாநில விருதுகள் உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
தற்போது மம்மூட்டி நடித்துள்ள நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படம் மலையாளம் மற்றும் தமிழில் உருவாகி வெளியாகவுள்ளது. இதனையடுத்து மோகன்லாலுடன் மலைக்கோட்டை வாலிபன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் மோகன்லாலுடன் கமல்ஹாசனும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
மலைக்கோட்டை வாலிபன் படத்தை அடுத்து தமிழில் நேரடி படங்கள் தயாரிக்க இருக்கிறார் லிஜோ ஜோஸ். அதில் கமல்ஹாசனுக்கு ஒரு படமும், சூர்யாவுக்கு ஒரு படமும் அடங்கும். இந்நிலையில் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாகவும் அந்த படத்துக்கான பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார் லிஜோ.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…