Sun ,Sep 24, 2023

சென்செக்ஸ் 66,009.15
-221.09sensex(-0.33%)
நிஃப்டி19,674.25
-68.10sensex(-0.34%)
USD
81.57
Exclusive

லோகேஷ் கொடுத்த ஹின்ட்... தளபதி 67க்கு ரெடியா மக்களே!

UDHAYA KUMAR Updated:
லோகேஷ் கொடுத்த ஹின்ட்... தளபதி 67க்கு ரெடியா மக்களே!Representative Image.

தளபதி 67 படத்தைப் பற்றிய அப்டேட் கேட்ட ரசிகர்களுக்கு ஒரு ஹிண்ட் கொடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அவர் சொன்ன ஹிண்டை வைத்து எப்போது அப்டேட் வெளியாகும், எந்த நாளில் வெளியாகும் என பதிவுகளை இட்டு சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் செய்து வருகின்றனர். 

வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தைத் தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்துள்ளார். இது உறுதியான தகவல் என்றாலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகிவில்லை. தயாரிப்பு தரப்பு முறையாக அறிவிப்பு வெளியிட வேண்டும் என கூறி யாரும் படத்தைப் பற்றிய சின்ன ஹிண்ட் கூட கொடுக்காமல் இருந்தனர். இந்நிலையில், லோகேஷ் கனகராஜே ஒரு ஹிண்ட் கொடுத்துள்ளார். 

சந்தீப் கிஷன், கௌதம் மேனன், விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் மைக்கேல் திரைப்படத்தின் புரமோசன் பணிகளுக்காக லோகேஷையும் படக்குழு அழைத்திருந்தது. அந்த விழாவில் பேசிய லோகேஷ் கனகராஜ் அதில் படத்தைப் பற்றி பாராட்டி பேசினார். படம் வேற மாதிரி வந்திருக்கும் என நம்புவதாகவும் படத்தைக் காண ஆவலுடன் இருப்பதாகவும் பலரும் பதிவிட்டு வரும் நிலையில், லோகேஷும் ஆவலுடன் காத்திருக்கிறார் என்கிறார்கள். காரணம் இந்த படத்தின் இயக்குநர் லோகேஷின் நண்பர் என்பதுதான். 

இதுகுறித்து பேசிக் கொண்டிருக்கையில் தளபதி 67 அப்டேட் கொடுங்க என ரசிகர்கள் கத்த ஆரம்பித்துவிட்டனர். இதனால் வேறு வழியில்லாமல் சில விசயங்களைக் கூறி ஆகவேண்டும் என ரசிகர்கள் கணக்கு போட்டிருந்தனர். ஆனால் லாவகமாக எஸ்கேப் ஆனார் லோகேஷ். ஆனாலும் விஜய் ரசிகர்களின் மனது கோணாத வகையில் ஹிண்டையும் கொடுத்துவிட்டு சென்றார். 

பிப்ரவரி 1, 2, 3 என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்பதே அது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்