Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

லவ் டுடே... 75 கோடி! வேற லெவல் ஹிட்

UDHAYA KUMAR Updated:
லவ் டுடே... 75 கோடி! வேற லெவல் ஹிட்Representative Image.

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் அவரே நடித்து வெளியான லவ் டுடே திரைப்படம் இன்றுடன் 75 கோடி வசூலைக் கடந்து சாதனை புரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதுவரை தமிழில் மட்டுமே 70 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்துள்ள இந்த படம் இன்று முதல் தெலுங்கு பதிப்பிலும் ரிலீசாகவுள்ளது. இதனால் பிரதீப் ரங்கநாதன் உள்ளிட்ட படக்குழுவினரும் தயாரிப்பு தரப்பும் மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். 

காதல் திரைப்படமாக இருந்தாலும் மிகுந்த ஜாலியாக காதலர்களுக்குள் இருக்கும் நடக்கும் சண்டையையும் அதற்கு காரணங்களையும் மக்கள் வாழ்க்கையில் நடப்பவற்றைக் கொண்டே மிக அழகாக திரைக்கதையாக்கி வெற்றியை சுவைத்துள்ளார் பிரதீப். 

வெறும் 5 கோடி ரூபாயில் உருவாகி தமிழகத்தில் மட்டும் 55 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் சாதனை புரிந்துள்ளது. தெலுங்கில் ஓபனிங் நிச்சயமாக 3 முதல் 4 கோடி வரை இருக்க வாய்ப்பிருப்பதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது.  தெலுங்கில் மட்டும் ஹிட் ஆகிவிட்டால் நிச்சயம் இந்த படம் 100 கோடி வசூலைத் தொடும் என உறுதியாக கூறமுடியும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்