Sun ,Dec 04, 2022

சென்செக்ஸ் 62,868.50
-415.69(-0.66%)
நிஃப்டி18,696.10
-116.40(-0.62%)
USD
81.57
Exclusive

வேற லெவல் வரவேற்பு.. வசூலில் பின்னிப் பெடலெடுக்கும் லவ் டுடே!!

Sekar November 07, 2022 & 14:24 [IST]
வேற லெவல் வரவேற்பு.. வசூலில் பின்னிப் பெடலெடுக்கும் லவ் டுடே!!Representative Image.

சில தினங்களுக்கு முன்பு வெளியான லவ் டுடே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளதோடு, வசூலிலும் பின்னிப்பெடலெடுத்து வருகிறது.

கோமாளி படம் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக லவ் டுடே என்ற படத்தை இயக்கியுள்ளார். மேலும் படத்திற்கு வசனம் எழுதியதோடு அவரே ஹீரோவாகவும் நடித்துள்ளார். இதன் மூலம் டி.ஆர்., ஹிப் ஹாப் தமிழா என இவர்களது வரிசையில் இணைந்துள்ளார் பிரதீப். பாடல்கள் முதற்கொண்டு அனைத்தையும் இவரே எழுதியுள்ளார். 

ஹீரோ பிரதீப் மற்றும் ஹீரோயின் இவானா இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வரும் நிலையில், இவர்களின் காதல் இவானவின் அப்பர் சத்யராஜுக்கு தெரிய வருகிறது. அவர் இருவரையும் அழைத்து இந்த காதலுக்கு சம்மதம் தெரிவிப்பதாகவும், ஆனால் ஒரு நாள் மட்டும் இருவரும் தங்களது மொபைல் போன்களை மாற்றிக் கொள்ளுமாறு சொல்கிறார். 

அதற்கு பிறகு என்ன ஆனது என்பதே லவ் டுடே படத்தின் கதையாகும். இந்தப் படம் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் வசூலிலும் சக்கை போடு போடுகிறது.

அந்த வகையில் இன்றைய நிலவரப்படி தமிழ்நாட்டில் மட்டும் 20 கோடியும், உலகம் முழுவதும் 27 கோடியும் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Also Read: வெட்க புன்னகை முகத்தில் மின்ன; திருமண கோலத்தில் நடிகை ஹன்சிகா! 

Tag: Love Today | Pradeep Ranganathan | Box Office Collection | .


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்