மகராசி சீரியல்: கடந்த 21 அக்டோபர் 2019-இல் இருந்து சன் டிவியில் திங்கள் முதல் சனி வரை மதியம் 11.00 மணிக்கு ஒளிப்பரப்பாகும் சீரியல் மகராசி. இதில் முக்கிய கதாபாத்திரமாக திவ்யா ஸ்ரீதர், எஸ்எஸ்ஆர் ஆர்யன் ஆகியோர் நடித்துள்ளனர். இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியலில் நடித்துள்ள நடிகர், நடிகைகளின் உண்மையான பெயர்கள், கதை, நேரம், இன்றைய எபிசோடு மற்றும் ப்ரோமோ உள்ளிட்ட முழு விவரங்களையும் இப்பதிவின் மூலம் விரிவாக பார்க்கலாம்.
மகராசி சீரியல் நடிகை, நடிகர்கள்:
உண்மையான பெயர் [Real Name] |
கதாபாத்திரத்தின் பெயர் [Character Name] |
திவ்யா ஸ்ரீதர் / ஸ்ரீதிகா சனீஸ் |
பாரதி புவியரசன் |
எஸ்எஸ்ஆர் ஆரியன் |
புவியரசன் சிதம்பரம் |
விஜய் |
தமிழரசன் சிதம்பரம் |
மௌனிகா தேவி |
மல்லிகா தமிழரசன் |
பிரவீணா / ஸ்ரீரஞ்சினி |
செண்பகம் சிதம்பரம் |
தீபன் சக்கரவர்த்தி |
சிதம்பரம் |
அஸ்வினி |
கோமதி கோபாலன் |
ரவிசங்கர் |
கதிரவன் |
சாத்விக் |
ராகுல் தமிழரசன் |
வந்தனா மைக்கேல் |
சந்திரிகா செந்தூர பாண்டியன் |
செந்தில்நாதன் |
பேச்சியப்பன் |
நேத்ரா ஸ்ரீ |
செங்கமலம் |
|
|
மகராசி சீரியல் முழு விவரம்:
சீரியல் பெயர் |
மகராசி |
சேனல் |
சன் டிவி |
ரிலீஸ் தேதி |
21 அக்டோபர் 2019 |
ஒளிப்பரப்பு நேரம் |
11.00 PM - 11.30 PM [20-22 நிமிடங்கள்] |
ஒளிப்பரப்பாகும் நாள் |
திங்கள் முதல் சனி வரை |
இயக்குநர் |
எஸ்.பி ராஜ்குமார [1–80 எபிசொட்] என். சுந்தரேஸ்வரன் [81–தற்போது] |
தயாரிப்பாளர் |
அனுராதா சரின், ஆர்.சதீஷ் குமார் |
தயாரிப்பு நிறுவனம் |
சன் என்டர்டெயின்மென்ட், சிட்ராம் ஸ்டுடியோஸ் |
ஓடிடி தளம் |
Sun Nxt |
மகராசி சீரியலின் கதை..
இந்த சீரியல் தமிழ் மற்றும் பாரதி என்னும் இரண்டு கதாபாத்திரங்களை மையமாக வைத்து நகரக்கூடியது. ஹரித்வாரில் ஐடி ஊழியராக பணியாற்றும் தமிழ் தன்னுடைய குழந்தையுடன் ரயில் சிதம்பரத்திற்கு கிளம்புகிறார். அப்போது பாரதி என்பவரை சந்தித்து இருவரும் நட்பு பாராட்டினர். பின்னர் தமிழ் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த கொடுமையை பாரதியிடம் கூறுகிறார். சிதம்பரத்தில் மகிழ்ச்சியான ஒரு கூட்டு குடும்பத்தில் வாழ்கிறார் தமிழ். ஆனால் ராகினி என்பவரை காதலிக்க, தன்னுடைய முறைப்பெண்களை திருமணம் செய்ய மறுக்கிறார். இதனால் தமிழின் தாய் கோமாவிற்கு சென்று விடுகிறார். தந்தையும் இவர் மீது கோபித்துக்கொள்ள, தன்னுடைய குடும்பத்தை விட்டு பிரிந்து ராகினியை திருமணம் செய்துக் கொள்கிறார். ஆனால் அவரின் ஆடம்பர வாழ்க்கை ஆசையால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகரிக்க இருவரும் பிரிந்து விடுகின்றனர். எனவே, பிரிந்த தன்னுடைய குடும்பத்துடன் சேர சிதம்பரம் செல்வதாக பாரதியிடம் கூறுகிறார்.
இவரின் நிலையை அறிந்த பாரதி தமிழிற்கு உதவ நினைக்கிறார். பின்னர் அவருடன் சிதம்பரத்திற்கு செல்ல,தமிழின் குடும்பத்தினர் இவர்கள் திருமணமானவர்கள் என்று தவறாக நினைத்து பாசம் காட்டுகின்றனர். சிறிது நாட்களில் பாரதி குடும்பத்தில் இருக்கும் அனைவரின் மனதை வென்று விடுகிறார். மேலும் கோமாவில் இருக்கும் தமிழின் தாயையும் காப்பாற்றுகிறார். மறுபக்கம், பாரதி பணக்கார வீட்டின் செல்ல மகள். அவர் புவி என்பவரை திருமணம் செய்து கொள்கிறார். அவர்கள் இருவரும் இல்லாதவர்களுக்கு உதவுவதை பெரிதாக மதிக்கின்றனர். ஆனால் பாரதியின் மாமா பாண்டியன் மற்றும் அவரின் மகன் மிதுன் இருவரும் சொத்துக்களை அபகரிக்க திட்டமிடுகின்றனர். இவர்களின் நடவடிக்கைகளை சந்தேகித்த புவி, பாரதியிடம் இது குறித்து கூறுகிறார். ஆனால் பாரதி பாண்டியனை முழுமையாக நம்புகிறார். பின்னர் உண்மை தெரிந்ததும் அவர்கள் பாரதியை கொலை செய்ய முயற்சிக்கின்றனர். அதில் இருந்து தப்பிக்கும் போது தமிழை சந்திக்கின்றார். இதுவே இந்த தொடரின் முக்கிய கதைக்களம்.
மகராசி சீரியலின் இன்றைய எபிசோடை பார்க்க இதை க்ளிக் செய்யவும்.
டிவியில் ஒளிப்பரப்பாவதற்கு முன்னபாக, சன் டிவி வெளியிடும் மகராசி சீரியலின் ப்ரோமோவை பார்க்க இதை க்ளிக் செய்யவும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…