ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள பெத்தபுரம் நகரில் சமீபத்தில் வெளியான அவதார் 2 படத்தைப் பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பலியான லட்சுமிரெட்டி ஸ்ரீனு, சமீபத்தில் வெளியான அவதார் 2 படத்தைப் பார்ப்பதற்காக தனது சகோதரர் ராஜுவுடன் பெத்தபுரத்தில் உள்ள திரையரங்கிற்குச் சென்றார்.
படத்தின் நடுவே ஸ்ரீனு திடீரென சரிந்து விழுந்தார். அவரது தம்பி ராஜூ உடனடியாக அவரை பெத்தபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக, தைவானில் 42 வயது நபர் ஒருவர் அவதார் திரைப்படத்தின் முதல் பாகம் 2010 இல் வெளியானபோது அதன் முதல் பாகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது மாரடைப்பால் இறந்தார் என்று அப்போது தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…