Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

விஜய் சேதுபதியின் மைக்கேல் மூவி.. ஒரு திரைப்பார்வை! | Michael Movie Review in Tamil

Gowthami Subramani Updated:
விஜய் சேதுபதியின் மைக்கேல் மூவி.. ஒரு திரைப்பார்வை! | Michael Movie Review in TamilRepresentative Image.

தமிழ் சினிமாவில் சுவாரஸ்யங்களும், விறுவிறுப்பும் நிறைந்த படங்கள் ரசிகர்களால் அதிகம் விரும்புபவையே. அதன் படியே, கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த மாநகரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. நெஞ்சில் துணிவிருந்தால், மாயவன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும், இந்த மாநகரம் படமே நடிகர் சந்தீப் கிஷான் அவர்களைப் பிரபலமடையச் செய்தது.

விஜய் சேதுபதியின் மைக்கேல் மூவி.. ஒரு திரைப்பார்வை! | Michael Movie Review in TamilRepresentative Image

மைக்கேல் மூவி

சந்தீப் கிஷான் நடிப்பில் வெளீவந்த மைக்கேல் மூவி தற்போது ரிலீஸ் ஆகி ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தின் இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால், ரசிகர் பட்டாளத்தையேக் கொண்ட விஜய் சேதுபதி, வரலட்சுமி சரத்குமார், திவ்யான்ஷா கவுசிக், கௌதம் மேனன், அனுசுயா பரத்வாஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

புரியாத புதிர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கிய இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி அவர்களே மைக்கேல் மூவியை இயற்றியுள்ளார்.

விஜய் சேதுபதியின் மைக்கேல் மூவி.. ஒரு திரைப்பார்வை! | Michael Movie Review in TamilRepresentative Image

மைக்கேல் கதை (Michael Story in Tamil)

பிரபல தாதாவாக மும்பையில் வலம் வருபவர் கௌதம் மேனன். இவரை எதிர்பாராத விதமாக ஆதரவற்ற இளைஞரான மைக்கேல் காப்பாற்றுகிறார். பின், குரு அவரை டெல்லிக்கு அனுப்பி வைக்க அங்கே தாதா குருவின் மகள் தீராவாக நடிக்கும் திவ்யான்ஷா கவுசிக்கிற்கும், மைக்கேலுக்கும் காதல் ஏற்படுகிறது. இதில், விஜய் சேதுபதி எங்கிருந்து வருகிறார். குருவிற்கும், விஜய் சேதுபதிக்கும் என்ன பிரச்சனை. இதில் குருவைக் கொல்லத் திட்டமிட்டது யார்? போன்ற பல்வேறு ட்விஸ்டுகளில் இந்த படத்திய இயக்கியுள்ளார் ரஞ்சித் ஜெயக்கொடி.

விஜய் சேதுபதியின் மைக்கேல் மூவி.. ஒரு திரைப்பார்வை! | Michael Movie Review in TamilRepresentative Image

மிரட்டும் காட்சிகள்

இந்தப் படமானது KGF படக் காட்சி அமைப்புடனே அட்டகாசமாகத் தொடங்குகிறது. படத்தில் லல் சீன்கள் இடம்பெற்றாலும், கோபக்கார இளைஞராகவே, சந்தீப் கிஷான் நடித்துள்ளார். பல்வேறு படங்களில் வித்தியாசமான கேரக்டரில் நடித்து வந்த இயக்குநர் கௌதம் மேனன், இந்தப் படத்தில் கேங்க்ஸ்டராக வருகிறார். எப்போதும் போல, தனது மிரட்டலான நடிப்பில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார் விஜய் சேதுபதி.

விஜய் சேதுபதியின் மைக்கேல் மூவி.. ஒரு திரைப்பார்வை! | Michael Movie Review in TamilRepresentative Image

Michael Movie Review

இந்தப் படத்திற்கான ரேட்டிங் என்னவென்று இதில் பார்க்கலாம்.

திரைக்கதை – 4 / 5

கதை – 3.5 / 5

இசை – 3 / 5

நகைச்சுவை – 3.5 / 5

ஒளிப்பதிவு – 3.75 / 5

இயக்கம் – 4.5 / 5

ஆக்ஷன் மூவியாக, ரசிகர்களின் மத்தியில் பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்த கதைக்களம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்