நித்தியானந்தாவைப் பற்றிய ரகசியங்கள், அவரின் தந்திரங்கள், வளர்ச்சி என அனைத்தையும் குறித்து விரிவாக பேசும் My Daughter Joined a Cult எனும் ஆவணப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
நித்தியானந்தா குறித்து எந்த செய்தி வந்தாலும் அது மிகப்பெரிய அளவில் பேசப்படுகிறது. அவரின் வளர்ச்சி பேசாம நாமளும் சாமியாரா போய்டலாமா என கேட்க வைக்கிறது. சர்ச்சைக்குரிய பல விசயங்களை செய்தாலும், இவர் செய்யும் ஒவ்வொன்றையும் மக்கள் ரசிக்கிறார்கள். பேசுவது, சிரப்பது, சொல்லும் எல்லாமே கண்டென்ட்டாக மாறி, இணைய உலகில் நகைச்சுவை மன்னராக மாற்றி வைத்திருக்கிறது. இவரது செயல்பாடுகளை சில திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரமாகவே வைத்து வெற்றியும் பெறுகின்றனர்.
இந்நிலையில்தான், இவரைப் பற்றிய முழுத் தகவல்களையும் கொண்டு ஆவணத் தொடர் ஒன்று 3 பாகங்களாக வெளிவருகிறது. அதில் ஒரு பகுதியாக இன்று டிஸ்கவரி ப்ளஸ் ஓடிடியில் இந்த தொடரின் முதல் பாகம் வெளியாகியிருக்கிறது. உண்மை விவரங்களை கொண்டடக்கிய இந்த முதல் பாகம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த தொடரை வைஸ் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. நமன் சரையா என்பவர் இயக்கியுள்ள இந்த தொடர் தமிழ், இந்தி, தெலுங்கு உட்பட 5 மொழிகளில் தயாராகியுள்ளது.
நித்தியானந்தாவின் நிஜ வாழ்க்கையில் பல மர்மங்கள் இருக்கின்றன. அவை மக்களுக்கு தெரியாமல் இருக்கின்றன. அவற்றை உலகுக்கு தெரியப்படுத்துவதே இந்த தொடரின் நோக்கமாக இருக்கிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…