Fri ,Mar 24, 2023

சென்செக்ஸ் 57,875.31
246.36sensex(0.43%)
நிஃப்டி17,050.55
62.15sensex(0.37%)
USD
81.57
Exclusive

Naane Varuven Review : நானே வருவேன் திரைவிமர்சனம்..!

Manoj Krishnamoorthi September 29, 2022 & 12:00 [IST]
Naane Varuven Review : நானே வருவேன் திரைவிமர்சனம்..!Representative Image.

இயக்குநர் செல்வ ராகவன் மற்றும் தனுஷ் கூட்டணியில் வந்த அனைத்து திரைப்படமும் மிகப்பெரிய தாக்கம் கொண்டதாகும். தற்போது திரையில்  வெளிவந்து இருக்கும் "நானே வருவேன்" திரைப்படம் 12 ஆண்டுகளுக்கு பிறகு செல்வா- தனுஷ் கூட்டணியின் 5 வது திரைப்படமாகும். 


நானே வருவேன் ஓடிடி ரிலீஸ் எப்ப வருது? எதுல வருது...!


பா. பாண்டி படத்திற்கு பிறகு மீண்டும் தனுஷ் கதை எழுதிய "நானே வருவேன்" திரில்லர் ஜானரில் வெளிவந்த திரைப்படமாகும். இந்த திரைப்படத்தில் சுவாரஸ்ய கதை பற்றி அறிய வேண்டுமா...? நம் திரை விமர்சனம் இதோ உங்களுக்காக இருக்கிறது.    

 


பொன்னியின் செல்வன் படத்தோட மெயின் வில்லி யாரு தெரியுமா?


கதாபாத்திரம் (Naane Varuven Tamil Movie Cast)

இயக்குநர்:- செல்வ ராகவன்

தயாரிப்பு:- கலைப்புலி எஸ். தாணு

கதை:- தனுஷ்

ஒளிப்பதிவு:- ஓம் பிரகாஷ்

இசை:- யுவன் சங்கர் ராஜா

நடிகர்கள்:-

தனுஷ்

இந்துஜா ரவிசந்திரன்

எல்லி அவ்ரம்

பிரபு

செல்வ ராகவன்

யோகி பாபு

ஷெல்லி கிஸ்ஸோர்

சரவண சுப்பையா

திரை பார்வை (Naane Varuven Review In Tamil)

கதையின் போக்கை செல்வ ராகவன்   எடுத்துரைக்கும் விதம் திரில்லர் ஜானருக்கு உரிய பாணியாகும். இந்த படத்தில் பிரபு மற்றும் கதிர் கதாபாத்திரத்தில் வரும் தனுஷ், வில்லன் ரோலில் மிரட்டி உள்ளார். இவரின் வில்லன் ரோல் மட்டுமே போது நம்மை திரையில் 2 மணி நம்மை வேறு சிந்தனை இல்லாமல் இருக்க செய்யும். 

கதை முழுவதும் தனுஷை சுற்றி நகர்வதால் மொத்த கதையின் பாரத்தை மிகவும் லாவகமாக கதாபாத்திரத்தின் வித்தியாசத்தில் வெளிப்படுத்தியது சிறப்பாகும். இரண்டாம் பகுதியில் இருக்கும் வேகம் முற்பகுதியில் இல்லாது இருப்பது படத்தை மெதுவாக எடுத்து சென்றுள்ளது. இருப்பினும் இரண்டாம் பகுதியில் மர்ம முடிச்சுகளை ஒவ்வொன்றாக வெளிப்படுத்தி திரைக்கதையில் நீடிக்க வைத்ததில் பின்னணி இசைக்கு ஒரு பங்கு உண்டு. கதையின் பதட்டத்தை நாம் உணரும் வகையில் இருக்கும் ஒளிப்பதிவு "நானே வருவேன்" படத்திற்கு ஒரு பலமாகும். 

கதை- 3/5

திரைக்கதை- 4/5

ஒளிப்பதிவு- 3.5/5

இசை- 3.5/5

செல்வ ராகவன் இயக்கம் என்றாலே அது எப்போது மாஸ்டர்பீஸ் தான் என்பதற்கு ஆதாரமாக மீண்டும் தன் தம்பியின் கதையில் மிகசிறந்த படைப்பைக் கொடுத்துள்ளார்.  மொத்தத்தில் ஒரு ராவான திரில்லர் ஜானர் படம் விரும்பும் ரசிகர்களுக்கு "நானே வருவேன்" செம டிரீட் ஆகும். 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்