Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

வில்லியாக ஐஸ்வர்யா ராய்... ! பொன்னியின் செல்வனின் நாயகிகள்.. நந்தினி Vs குந்தவை !

UDHAYA KUMAR September 29, 2022 & 17:00 [IST]
வில்லியாக ஐஸ்வர்யா ராய்... ! பொன்னியின் செல்வனின் நாயகிகள்.. நந்தினி Vs குந்தவை !  Representative Image.

பொன்னியின் செல்வன் படத்தின் வில்லியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கிறாரா என்பது சிலருக்கு ஆச்சர்யமான விசயமாக இருக்கலாம். சிலர் இதை ஏற்கனவே தெரிந்து வைத்திருக்கலாம். பொன்னியின் செல்வனில் இரண்டு கதாபாத்திரங்கள் அதுவும் பெண் கதாபாத்திரங்கள் மிகவும் சக்தி வாய்ந்த, அவர்கள்தான் இந்த தேசத்தை ஆட்டுவிப்பவர்களாக காட்டப்படுகிறார்கள். 

நல்லது vs கெட்டது 

சோழ தேசத்துக்கு நல்லது செய்யும் குந்தவையும், சோழ தேசத்தை அழிக்க நினைக்கும் நந்தினியும் எதிரெதிர் துருவத்தில் இருக்கிறார்கள். இருவருக்கும் ஒருவரையொருவர் பிடிக்காது. ஆனால் வெளியில் பெரிதாக காட்டிக் கொள்ளமாட்டார்கள். 

ஆதித்த கரிகாலன் 12 வயதில், தன்னுடைய பாட்டி வீட்டில் வளர்கிறான். அவனது தங்கை குந்தவையும், தம்பி அருள்மொழியும் அருகே விளையாடும்போது, அங்கே அருகில் இருப்பவர்தான் நந்தினி. ஒரு சாதாரண வீட்டுப் பெண். அவளை கரிகாலனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவளுக்கு கரிகாலனை பிடித்திருந்தது. ஆனால் குந்தவைக்கு நந்தினியை அரவே பிடிக்கவில்லை. 
 

வில்லியாக ஐஸ்வர்யா ராய்... ! பொன்னியின் செல்வனின் நாயகிகள்.. நந்தினி Vs குந்தவை !  Representative Image

குந்தவையின் அழகு

இப்படி கதையை ஆரம்பிக்கும் கல்கி, குந்தவையை எப்படி வர்ணிக்கிறார் தெரியுமா?

செந்தாமரையின் நிறம் கொண்டவன் குந்தவை. கைத்தேர்ந்த சிற்பிகளால் செதுக்கப்பட்ட சிலை வடிவத்தைப் போல சிறிது நீள்வட்ட வடிவமாய் இருக்கிறது.  குந்தவையின் கண்களின் நிறமோ கருநீலம், மூக்கோ பன்னீர்ப்பூவின் மொட்டு போலவும் இதழ்கள் மாதுளையின் இளம்கனியின் நிறத்தை ஒத்தது. குந்தவையின் கூந்தல் இவளை அரசி என்பதற்கேற்ப மணிமுடி சூடியதாக அமைந்துள்ளது எனுமாறு எழுதியிருக்கிறார். 

வில்லியாக ஐஸ்வர்யா ராய்... ! பொன்னியின் செல்வனின் நாயகிகள்.. நந்தினி Vs குந்தவை !  Representative Image

குந்தவையின் குணம்

அருள்மொழி வர்மன்

கரிகாலன், குந்தவை இருவருக்கும் தம்பி அருள்மொழிவர்மன். குந்தவையின் பாசத்துக்கும் நேசத்துக்கும் உரிய அன்பு மிக்கவன். சிறு வயதிலிருந்தே அக்காள் சொல்வதைக் கேட்பான். செய்வான் அருள்மொழிவர்மன். 

கம்பீரமான குந்தவை

குந்தவை இளையபிராட்டி என்று அழைக்கப்படுவதற்கான காரணம் தந்தை, அண்ணன், தம்பி என 3 வீர தீர சூர ஆண்கள் இருந்தாலும், குந்தவையே சோழ சாம்ராஜ்யத்தின் மிகப் பெரிய சாணக்கியராக திகழ்ந்தார்.  எந்த வெளிநாட்டு அரசரையும் திருமணம் செய்யக்கூடாது. சோழ தேசத்திலேயே தான் இருக்க வேண்டும் என நினைப்பவள் குந்தவை. 

வில்லியாக ஐஸ்வர்யா ராய்... ! பொன்னியின் செல்வனின் நாயகிகள்.. நந்தினி Vs குந்தவை !  Representative Image

நந்தினியின் அழகு

நந்தினியின் அழகை எப்படி வர்ணிக்கிறார்?

தங்கம் போல் ஜொலிஜொலிக்கும் உடலைக் கொண்டவள் நந்தினி. சந்திரனைப் போல வட்ட வடிவ முகத்தைக் கொண்ட நந்தினியின் கண்கள் கருநிறமானது.  தட்டையாக வழுவழுப்பான தந்தத்தைக் கொண்டு செய்தது போல இருக்கும் மூக்கு உடையவள் நந்தினி.  அமுதம் ததும்பும் பவளத்தைப் போல செக்கச் செவேல் என உதடுகளும்,  மலர்ச்செண்டுகளைப் போல கூந்தலும் கொண்டிருந்தால் நந்தினி என வர்ணிக்கிறார் கல்கி. 
 

வில்லியாக ஐஸ்வர்யா ராய்... ! பொன்னியின் செல்வனின் நாயகிகள்.. நந்தினி Vs குந்தவை !  Representative Image

நந்தினியின் குணம்

ஆழ்வார்க்கடியான் நம்பி

நந்தினி குழந்தையாக இருந்தபோது அவளை எடுத்து வளர்த்தவன் நம்பி.  தனது சொந்த தங்கை போல வளர்த்த அவனை விட்டு, தனது 12வது வயதில் சோழ நாட்டுக்கு வருகிறாள் நந்தினி. குந்தவையோடே தங்கியிருக்கிறாள். 

தன் தங்கையின் தோழியான அறிமுகமான நந்தினியை காதலிக்கிறான் கரிகாலன். 

சோழர் - பாண்டியர் போரின் போது மீண்டும் மதுரைக்கு செல்கிறாள் நந்தினி.  

சோழ நாட்டில் போர்க்களம் சூழ்ந்திருக்க, தன் காதலுக்கு இப்போது நேரமில்லை என நினைத்த கரிகாலன் ஆக்ரோஷமாக வெறியாட்டம் ஆடுகிறான். போர்களில் வெற்றிகளைக் கண்டு சந்தோஷப்படுகிறான். 

சில ஆண்டுகளுக்குப் பிறகு வீரபாண்டியனைத் தேடி செல்ல நந்தினியைக் காண்கிறான். அங்கே வீரபாண்டியனுக்கு பணிவிடை செய்ய, அவனை காதலன் என்று கூற தன் வாளால் அவன் தலையை வெட்டி வீழ்த்துகிறான் கரிகாலன்.  அதன்பிறகு நந்தினியை அவன் பார்க்கவே இல்லை. 

பழுவேட்டரையரை வலைக்குள் வீழ்த்தி, அவர் மூலம் சோழ நாட்டை சீர்குலைக்க முயல்கிறாள் நந்தினி. பல ஆண்டுகளுக்குப் பிறகு நந்தினியை பழுவேட்டரையரின் மனைவியாகத்தான் பார்க்க நேர்கிறது. 

அப்போதும்கூட, கரிகாலனை கவிழ்த்து தனியே வரவழைத்து, கொலை செய்ய சதி தீட்டப்படுகிறது. இப்படி நந்தினியின் கதாபாத்திரம் மிக சவாலானதாகவும், சிக்கலானதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. 

வில்லியாக ஐஸ்வர்யா ராய்... ! பொன்னியின் செல்வனின் நாயகிகள்.. நந்தினி Vs குந்தவை !  Representative Image

நந்தினி Vs குந்தவை

நந்தினி மிகவும் அழகானவள் அதனாலேயே அவளை குந்தவைக்கு பிடிக்கவில்லை. அதேபோல், குந்தவையின் அறிவு நந்தினிக்கு பிடிக்காது. குந்தவை மிகவும் புத்திசாலி, சாணக்கியத்தனமாக பல திட்டங்களைத் தீட்டி தனது வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்பவள். சோழ தேசத்தை அழிக்க வேண்டுமென்றால் குந்தவையையும் அழிக்க வேண்டும் என நந்தினி நினைப்பதிலிருந்தே குந்தவையின் சக்தியை அறியமுடியும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்