நடிகை நயன்தாரா சமீபத்தில் கலந்து கொண்ட கல்லூரி விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகின்றன. கல்லூரி விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் மாணவர்களுக்கு நல்ல அறிவுரையும் வழங்கி கலகலப்பாக கொண்டு சென்றார். நயன்தாராவைக் காண பல ரசிகர்கள் அரங்கத்தில் திரண்டு இருந்தனர்.
சென்னை அருகே தனியார் கல்லூரி ஒன்றில் 35 ஆண்டு வெற்றி விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகை நயன்தாரா அழைக்கப்பட்டிருக்கிறார். அவரது சினிமா வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களைப் பார்த்தவர் அவர். இதனால் அவரை முக்கிய விருந்தினராக கல்லூரி நிர்வாகம் அழைத்திருக்கிறது.
விழாவில் கலந்து கொண்டு பேசிய நயன்தாரா, மாணவர்களிடம் சில அறிவுரைகளை வழங்கினார். மாணவர்கள் வாழ்க்கையில் எப்போதும் ஹேப்பியா இருக்க வேண்டும். மிக அதிகமாக ஸ்ட்ரெஸ் எடுத்துக் கொள்ள வேண்டாம். எது எப்படி இருந்தாலும் வாழ்க்கைல எல்லாருமே சக்ஸஸ்ஃபுல்லா மாறுவீங்க. ஆனா அந்த சமயத்துல நாம முன்னாடி வருத்தப்பட்ட நாட்கள பத்தி நினைச்சி கவலை படுவீங்க. இதனாலதான் சொல்றேன் எப்பவும் ஹேப்பியா இருங்க என்று பேசியுள்ளார்.
சத்யபாபா பல்கலைகழகத்தின் அம்பாசிடராக இருக்கும் நடிகை நயன்தாரா இவ்விழாவுக்கு வைலட் நிற டிரான்ஸ்பரண்ட் சேலை ஒன்றில் அழகாக கொண்டை போட்டு மல்லிகைப் பூ சூடி, கண்களைக் கவரும் அழகிய கலர்ஃபுல் தேவதையாக வந்த மிளிர்ந்தார். மேடையில் வைக்கப்பட்ட அலங்காரமும் ஒளி விளக்குகளும் நயன்தாராவை அப்படியே தேவதையாக காட்டின. இதனால் இந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…