நயன்தாராவுடனான திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன். திருப்பதியிலிருந்து மகாபலிபுரத்துக்கு திருமணம் மாற்றப்பட்டது ஏன் என்பது குறித்தும் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோரின் திருமணம் வரும் ஜூன் 9ம் தேதி அதிகாலை நேரத்தில் மகாபலிபுரத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகியிருந்தது. திருப்பதியிலிருந்து மாற்றப்பட்டு மகாபலிபுரத்தில் ரிசார்ட் ஒன்றில் நடைபெறவுள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் விக்னேஷ் சிவன்.
கமல், சூர்யா இணையும் அடுத்த படத்தில்....! கமல்ஹாசன் வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ!
ஜூன் 9ம் தேதி நண்பர்கள், உறவினர்கள் என குறுகிய வட்டாரத்தினர் மட்டுமே விழாவில் பங்கேற்பார்கள் என அறிவிப்பு. திருப்பதி மிகவும் பயண தூரம் கொண்டது என்பதால் மகாபலிபுரத்திலேயே திருமணத்தை நடத்திக்கொள்ளலாம் என முடிவு செய்ததாகவும் விளக்கம் அளித்துள்ளார் விக்னேஷ் சிவன்.
இவர்களது திருமணம் வீடியோவாக எடுக்கப்பட்டு தொகுக்கப்பட்டு நெட்பிளிக்ஸில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…