நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியர்கள், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்ற சம்பவம் குறித்த விசாரணைகள் எழுந்த நிலையில், தற்போது சுகாதாரத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றதில் விதி மீறல்கள் இருப்பதாக புகார் ஒன்று வெளிவந்தது. இவர்களுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வந்த நிலையிலும், அவர்கள் இந்த பிரச்சனையை சமாளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இது குறித்து சுகாதாரத்துறை இன்று அறிக்கை வெளியிடும் என தெரிவித்தது. அதன் படி, நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியர்கள், மற்றும் வாடகைத் தாய் ஆகியோரின் வயது, ஐ.சி.எம்.ஆர் முறைக்கான வழிகாட்டு நெறிமுறைகளின் படியே குழந்தைகளைப் பெற்றுள்ளனர். மேலும், இதில் வாடகைத் தாய் உரிய தகுதியான வயதில் உள்ளார்.
மேலும், விக்னேஷ் சிவன் நயன்தாரா தம்பதியினருக்கு, கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11 ஆம் தேதி பதிவுத் திருமணம் நடைபெற்றதாகவும் பதிவுச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என சுகாதாரத் துறை அமைச்சகம் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…