Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

சிம்புவைத் தொடர்ந்து உடல் எடை குறைந்த முன்னணி ஹீரோ!

UDHAYA KUMAR Updated:
சிம்புவைத் தொடர்ந்து உடல் எடை குறைந்த முன்னணி ஹீரோ!Representative Image.

தனது உடல் எடையைக் குறைக்க பல்வேறு பயிற்சிகளைக் கடைபிடித்து உடல் எடை குறைந்து மீண்டும் சினிமாவில் கலக்கி வருகிறார். இந்நிலையில், அவரைப் போலவே அதிக உடல் எடையைக் குறைத்து ஸ்லிம்மாகி வந்துள்ளார் நடிகர் நிவின்பாலி. 

நிவின் பாலி கிட்டத்தட்ட 25 கிலோ வரை எடை குறைந்துள்ளார். இதுதான் தற்போதைய டாக் ஆஃப் தி டவுன். ஆளே மாறிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்கள். அவை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. 

மலர்வாடி ஆர்ஸ் கிளப் படத்தின் மூலம் அறிமுகமான நிவின், முக்கியமான பல படங்களில் நடித்து பிரபலமானார்.  தட்டத்தின் மரையத்து, 1983, நேரம், ஓம் சாந்தி ஓசானா உள்ளிட்ட படங்களினால் தமிழகத்துக்கும் அறிமுகமானவர் தொடர்ந்து பிரேமம் படம் மூலம் உலக அளவில் ரசிகர்களிடையே அறிமுகமானார். 

கொரோனா காலக்கட்டத்தில் உடல் எடையை காக்காததால் அதிக எடை போட்டு குண்டாக காட்சியளித்தார்.  சில படங்களில் குண்டான உடல் எடையோடு நடித்தும் படம் தோல்வியடைந்ததை அடுத்து, உடல் எடையை சரி செய்ய முயற்சி எடுத்தார். 

அவரின் முயற்சியால் இப்போது 25 கிலோ எடை குறைந்து திரும்பி வந்துள்ளார் நிவின்பாலி. ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை எனும் படத்தில் இப்போது நடித்து வருகிறார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்