தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராகிய விஜய் சேதுபதி, விஜய், ரஜினி, கமல்ஹாசன் என அனைவருடனும் நடித்துவிட்டார். சோலோ ஹீரோவாகவும் கலக்கி வருகிறார். இப்படி தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக கலக்கி வரும் விஜய் சேதுபதி ஒரு காலத்தில் சன் டிவியில் சீரியல் ஒன்றில் சைடு கேரக்டரில் நடித்துள்ளார்.
சினிமாவில் கதாநாயகனுக்கு பின்னாடி நின்று சில சில காட்சிகளில் முகத்தைக் காட்டியவர் விஜய் சேதுபதி. அவரே இத்தனை ஆண்டுகள் கஷ்டப்பட்டு நல்ல கதாபாத்திரங்களில் நடித்து மேல வந்துள்ளார். இது அவரது ரசிகர்கள் அவரைப் பற்றி சொல்லும் பெருமையாகும்.
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாகவும், தமிழ், தெலுங்கு சினிமாக்களில் குணசித்திர, வில்லன் வேடங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. இவரது படங்களில் மற்ற நடிகர்களின் நடிப்பு பேசப்படுதோ இல்லையோ, இவரது நடிப்பு நிச்சயமாக பேசப்படும்.
தற்போது முன்னணி நடிகராக இருந்தாலும், சினிமாவுக்கு வரும் தருவாயில் பல கஷ்டங்களைச் சந்தித்துள்ளார். அப்போது அவருக்கு வாய்ப்பு சின்னத்திரையில் கிடைத்த நிலையில், சீரியலிலும் நடித்துள்ளார்.
சன்டிவியில் வெளியான பெண் எனும் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் விஜய் சேதுபதி. இந்த தகவல் விஜய் சேதுபதி ரசிகர்களில் பலருக்கும் தெரியாது. இத்தனை கஷ்டங்களையும் அனுபவித்துக் கொண்டு படிப்படியாக நடித்து முன்னேறியிருக்கிறார் அவர்.
புதுப்பேட்டை படத்தை உதாரணமாக கூறுவார்கள். அதன் பிறகு நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பீட்சா, சூது கவ்வும், மேற்கு தொடர்ச்சி மலை என அடுத்தடுத்து நல்ல நல்ல படங்களில் தோன்றி, இப்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார்.
சமீபத்தில் அவர் கமல்ஹாசன், பஹத் பாசிலுடன் இணைந்து விக்ரம் திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த திரைப்படம் வெளியாகி 5 நாட்கள் ஆன நிலையில் பட்டித் தொட்டியெல்லாம் பயங்கர வரவேற்பை பெற்றுள்ளது. விஜய் சேதுபதி கதாபாத்திரமும் மிகவும் பேசப்பட்டு வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…