பாண்டியன் ஸ்டோர்ஸ் | பாக்கியலட்சுமி | மெகா சங்கமம் - ஒன்றாக சேர்ந்த இரண்டு சீரியல். கொடைக்கானலில் ஒன்றாக சேரும் இரண்டு சீரியலில் நடக்கும் நக்கல் நையாண்டியை பற்றி பார்ப்போம்.
கோபி எப்படியோ கல்யாணம் நடந்துருச்சுன்னு சந்தோஷத்துல ராதிகா கூட்டிட்டு கொடைக்கானலுக்கு ஹனி மூன் கொண்டாட வந்திருக்காரு. அங்கையும் ஒட்டு மொத்த குடும்பமும் வந்தத பாத்துட்டு அப்டியே ஷாக் ஆகிட்டாரு. இவங்களால கோபி ராதிகாக்கு ஒரே சண்டை. ராதிகாவை சமாதன படுத்துறதே கோபிக்கு வேலையா போச்சு. ஆனா மத்தவங்க ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்னு ஜாலியா இருக்காங்க.
இன்னைக்கு எடுத்த உடனே நம்ப பாக்கியா சூப்பரா பாடி அசத்துறாங்க. என்னடா நம்ப பாக்கியாவா இப்டி பாடுறதுன்னு கோபி மெய்மறந்து பாத்து கை தட்டி ரசிக்கிறாரு. உடனே ராதிகாக்கு கோவம் வந்து கெளம்புறாங்க, அவள சமாதான படுத்த கோபி பின்னாடியே போறாரு. அடுத்த நாள் எல்லாரும் சந்தோசமா படகு சவாரிக்கு போறாங்க. கண்ணனும் ராமமூர்த்தி ரெண்டு பேரு மட்டும் கரைல நிக்கிறாங்க. அப்பனு பாத்து வந்து மாட்டுனாப்ல கோபி. அவங்க ரெண்டு பேத்தையும் வெறுப்பேத்தவே கண்ணன் அவங்களோட படகு சவாரிக்கு போறாங்க. அங்க ராமமூர்த்திய பாத்த உடனே கோபி சும்மா மெரண்டுட்டாரு. ஸ்டாப் ஸ்டாப் போட்ட திருப்புங்கன்னு கூச்சல் போட்டுட்டே போறாரு. ஆனா நம்ப கண்ணனும் ராமமூர்த்தியும் பாட்டு பாடி அவங்க ரெண்டு பேத்தையும் நிம்மதியா இருக்க விடாம நக்கல் அடிச்சிகிட்டே வராங்க.
அடுத்து வெளியான ப்ரோமோவில் கோபிக்கு விருது வழங்கும் விழா. தன்னுடைய புருஷனுக்கு விருது, நாம தான் சூப்பரா இருக்கணும்னு செம்ம அலப்பறை. விருது வழங்கிய பிறகு கோபிக்கு சப்போர்ட்டா இருந்த மனைவியை மேலே கூப்பிட்றாங்க. நம்மள தான் கூப்பிடறாங்களோன்னு நம்பி எந்திரிச்சாங்க ராதிகா. ஆனா பாவம் பாக்கியாவ மேலே கூப்பிட்டாங்க. செம்ம நோஸ் கட்டோட நிக்கிறாங்க ராதிகா.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…