Pandian Stores Today Episode: இந்த வாரம் பாண்டியன் ஸ்டோர்ஸ்-ல் முல்லை, கதிர் இருவரும் வீட்டை விட்டு வெளியேறும் சம்பவம் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த வாரம்
பணம் பத்தும் செய்யும்னு சொல்லுவாங்க. அப்படி தான், பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தையும் செஞ்சிருக்கு. ஒரு வீட்டுல இருக்க அண்ணன், தம்பிகள் எல்லாம் ஒற்றுமையா இருந்தாலும், அந்த வீட்டுக்கு வர மருமகள்களும் ஒற்றுமையா இருந்தா தான் அந்தக் குடும்பம் நல்லா இருக்கும். இல்லைனா, இப்படி தான் குடும்பம் பிரிந்து போகும். ரொம்ப நாளா முல்லைக்குக் குழந்தை இல்லைனு ரொம்ப கஷ்டப்பட்டு ட்ரீட்மென்ட் எடுத்து, இப்போது அதுலயும் வாய்ப்பு இல்லனு சொல்லிட்டாங்க.
முல்லைய அந்த விஷயத்துல வெளில கொண்டு வர, கதிர் ரொம்ப முயற்சி எடுத்தாங்க. இப்படி, எல்லா இடத்துல இருந்தும் கடன் வாங்கி காசு கொடுத்து எப்படியோ ட்ரீட்மென்ட் முடிஞ்சது. இப்படி கடன் வாங்கிய காசு எல்லாரும் கேட்க ஸ்டார்ட் பண்ணீட்டாங்க. அப்படித் தான், தனாவோட பிறந்தநாளைக் கொண்டாட எல்லோரையும் கூப்பிட்டு செலிபிரேட் பண்ணாங்க. அந்த நேரத்துல, அங்க கடனை வாங்க வந்தவர் ஒருத்தர், அதையும் இதையும் பேச, ஜீவா, மீனாகிட்ட போய் பணம் கேட்கப் போறாரு. மீனாவோட செலவுக்கு அவங்க அப்பா, அம்மா கொடுத்த பணம் தான் வைத்திருக்காங்க. நான் ஏன் என்னோட அப்பா, அம்மா பணத்தைத் தரணும்னு மீனா கேட்க, ஜீவா நாளைக்குக் கொடுக்கிறேனு சொல்லுறாரு. மீனா சம்மதிச்சி ஜீவாட்ட பணத்தைக் கொடுக்கிறாங்க. வெளியில அந்த கடன் கொடுத்தவங்க கிட்ட ஜீவா வாங்கிக் கடனை அடைச்சிட்டாங்க.
மீனாவோட அப்பா, அம்மாவுக்கு இது தெரிஞ்ச அப்றம் மூர்த்தி கிட்ட சண்டை போடுறாரு. எப்படி என்னோட பொண்ணு பணத்தை வாங்கி நீங்க கொடுக்கலாம்னு. முல்லைக்கு ட்ரீட்மென்ட் பண்ணனும்னா, அது கதிர் தான் பண்ணனும், என்ன எதுக்குப் பண்ண சொல்றீங்கனு பெரிய சண்டை. என்னோட மருமகனை நீங்க எப்படி பேசலாம்னு முல்லையோட அம்மா ஒரு பக்கம், என்னொட மகளோட பணத்துல நீங்க எப்படி கடனை அடைக்கலாம்னு மீனா அப்பா ஒரு பக்கம்.
இதற்கிடையில், தனா கையில் இருந்து வளையல் கொடுத்து, பணம் வாங்கிட்டு வானு கண்ணன அனுப்புறாங்க. இதை பார்த்து, தனாவோட அம்மா, நீ எதுக்கு கொடுக்கணும்னு சண்டை போட, பெரிய வாக்குவாதம் போய்ட்டு இருந்தது.
வரும் வாரம்
உடனே கதிர், நீங்க யாரும் சண்டை போட்டுக்க வேணாம். முல்லைக்கு செலவு செய்ததை நானே பாத்துக்கிறேனு சொல்லுறாரு. எப்படி நீங்க அவ்ளோ பணத்தை ரெடி பண்ணுவிங்கனு கதிரைப் பார்த்து மீனாவோட அப்பா கேள்வி கேக்குறாரு. நாம் பணத்தை எப்படியாவது கொடுக்கிறேன்… எனக்குக் கொஞ்சம் டைம் மட்டும் கொடுங்கனு கேக்குறாரு. அண்ணா, நாங்க போறோம்னு மூர்த்திட்ட கதிர் சொல்றாரு. மூர்த்தி, நீ போனா இனிமே இந்த வீட்டுக்கு வந்துறாதனு அழுதுட்டே சொல்றாரு. ஆனால், வீட்டுல எல்லாரும் சொல்றத கேக்காம, முல்லைய கூட்டிட்டு வெளியில கிளம்புறாரு. சென்னையில இருக்க கதிரோட ஃப்ரெண்ட் வீட்டுக்கு போவாருனு எல்லாரும் நினைக்கிறாங்க. இது உண்மையா, இல்ல வேற எங்கப் போவாரு, எப்படி கடனை அடைப்பாரு இந்த கேள்விக்கு எல்லாம் விடை வேணும்னா தொடர்ந்து இணைந்திருங்கள்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....!
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…