குடும்பத்துடன் சுற்றுலாவுக்கு சென்ற இடத்தில் கோபி, கண்ணாவின் கண்களில் பட, அவனோ ஓடி வந்து மாம்ஸே உம்மா.. நீங்க இங்க வருவீங்கன்னு யாருமே என்கிட்ட சொல்லலியே.. சர்ப்ரைஸா... என கோபியைக் கட்டி அணைத்து அதோகளப்படுத்திவிட்டான் கண்ணன்.
கண்ணனைப் பார்த்த அதிர்ச்சியில் கோபி என்ன செய்வதென்று புரியாமல் முழிக்க, என்ன அங்க பாக்குறீங்க.. ஓ இதுதான் உங்க ரூமா என கண்ணன் கேட்டு கோபியை மேலும் சங்கடப்படுத்துகிறான். வாங்க மாம்ஸ் இங்க ஒரே பணியாய் பெய்யுது. உள்ள போயி பேசலாம் என கோபியை இழுத்துக் கொண்டு ரூமுக்குள் சென்றுவிடுகிறான் கண்ணன்.
அதுமட்டுமின்றி மாம்ஸே உங்களுக்கு இவ்வளவு பெரிய ரூமா எனவும், அங்குள்ள பெட்டில் விழுந்து குதித்து புஷு புஷு பெட்டா எனவும் கூறி அவரை கதிகலங்கச் செய்கிறான் கண்ணன். அய்யய்யோ என தலையில் அடித்துக் கொண்டு அவஸ்தை படுகிறான் கோபி. இப்படியாக இன்றைய எபிசோடு கல கல வென இருக்கப்போகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…