Mon ,Dec 11, 2023

சென்செக்ஸ் 69,928.53
102.93sensex(0.15%)
நிஃப்டி20,997.10
27.70sensex(0.13%)
USD
81.57
Exclusive

வாடகைத் தாய் விதி மீறல்.. நயன்-விக்கி ஜோடி மீது பாய்ந்தது வழக்கு!!

Sekar October 15, 2022 & 12:56 [IST]
வாடகைத் தாய் விதி மீறல்.. நயன்-விக்கி ஜோடி மீது பாய்ந்தது வழக்கு!!Representative Image.

பிரபல கோலிவுட் ஜோடியான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடியின் வாடகைத் தாய் விவகாரம் இளைஞர்களிடையே தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் எனக் கூறி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீண்ட காலமாக காதலித்து வந்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். நானும் ரவுடிதான் படத்தோடு காதலை தொடங்கி, காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தோடு மண வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்தனர்.

திருமணத்திற்கு பிறகு ஹனிமூன் சென்று திரும்பிவிட்டு, இருவரும் சினிமாவில் அவரவர் பணிகளில் பிசியாகி விட்டனர். இந்நிலையில் திடீரென இருவரும் தாங்கள் இரட்டைக் குழந்தைக்கு பெற்றோர் ஆகிவிட்டோம் என்ற தகவலை வெளியிட்டு அதிர்ச்சியும், ஆச்சரியமும் கொடுத்தனர். 

எனினும் பின்னர் தான் இவர்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றது தெரியவந்தது. இந்தியாவில் வாடகைத்தாய்க்கு கட்டுப்பாடுகள் இருக்கும் நிலையில், திருமணமாகி வெறும் நான்கு மாதங்களே ஆகும் நிலையில் இவர்கள் எப்படி வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றார்கள் எனும் கேள்வி எழுந்து சர்ச்சையாக மாறியது. 

இதையடுத்து இந்த வாடகைத்தாய் விவகாரம் குறித்து தமிழா அரசும் விசாரணை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் விதிமுறைகளை மீறியதாக கூறி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 

இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி கமிஷனர் அலுவலகத்தில் வழக்கறிஞர் ஒருவர் புகார் கொடுத்துள்ளார். வாடகைத் தாய் விவகாரம் மூலம் இவர்கள் இளைஞர்கள் மற்றும் சமூகத்திற்கு தவறான முன்னுதாரணத்துவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்