Sun ,Apr 02, 2023

சென்செக்ஸ் 57,794.75
181.03sensex(0.31%)
நிஃப்டி17,012.25
60.55sensex(0.36%)
USD
81.57
Exclusive

பொன்னியின் செல்வன் முதல் நாளே வசூல் வேட்டை...

Nandhinipriya Ganeshan September 30, 2022 & 11:14 [IST]
பொன்னியின் செல்வன் முதல் நாளே வசூல் வேட்டை...Representative Image.

உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் என்ற நாவலை இயக்குனர் மணிரத்தினம் "பொன்னியின் செல்வன்" என்ற படத்தை இரண்டு பாகங்களாக இயக்குகின்றார். அந்தவகையில் இப்படத்தின் முதல் பாகம் இன்று திரையில் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. இந்தத் திரைப்படத்தில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், அஸ்வின்,கிஷோர் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அது மட்டுமல்லாமல் ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்திய தேவனாக கார்த்தியும், ராஜராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர். அதில் நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக திரிஷாவும் தங்களது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல் நாளிலேயே 50 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.எதிர்பார்த்த 50 கோடியை வசூல் செய்யும் பட்சத்தில் முதல் நாளில் அதிக வசூல் செய்த தமிழ் படம் என்ற சாதனையை படைக்கும். தமிழக முழுவதும் பெருவாரியான திரையரங்குகள் ஹவுஸ் ஃபுல் ஆகியுள்ள நிலையில் பல வசூல் சாதனை இன்று முறியடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்