மக்களே! நாம் அனைவரும் எதிர்பார்த்த அந்த நாள் இதோ வந்துவிட்டது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் ரிலீஸ் ஆகா போகிறது. மணிரத்தினம் அவர்கள் இயக்கிய இந்த மாபெரும் காவியத்தில் சினிமா உலகின் மிகப்பெரும் ஜாம்பவான்கள் நடித்துள்ளனர். அந்ததந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிகர்களை தீர்வு செய்து இந்த காவியத்தை மணிரத்தினம் அவர்கள் உருவாக்கியுள்ளார் என்று அனைவரும் கூறி வருகின்றனர். இந்த படத்திற்கு முக்கிய பலமாக ஏ.ஆர். ரஹ்மான் அவர்கள் இசையமைத்த ஆறு பாடல்களும் தமிழுக்கும், பொன்னியின் செல்வன் கதைக்கும் பெரும் அழகை சேர்த்துள்ளது.
அதில் 6 ஆவதாக வெளிவந்த "தேவராளன் ஆட்டம்" உருவான கதை மற்றும் அதனின் மறைக்கப்பட்ட அர்த்தம் என்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
அந்த காலகட்டத்தில் தெய்வீக சக்திகளைக் கொண்டவன் ஆடும் ஆட்டம் தான் தேவராளன் ஆட்டம் ஆகும். இந்த பாடல் பொன்னியின் செல்வன் நாவலில் வரும் குரவைக்கூத்து அத்தியாயத்துடன் வருவதாக கூறப்படுகிறது. பொன்னியின் செல்வன் நாவலில் கடம்பூர் மாளிகையில், தனது நண்பன் கந்தமாறனை சந்திக்கிறான் வந்தியத்தேவன். அதில் இந்த குரவைக்கூத்து குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
தன்னுடைய பொன்னியின் செல்வன் புத்தகத்தில் அமரர் கல்கி குரவைக்கூத்து குறித்து தெரிவிப்பது. "முக்கிய விருந்தாளிகள் அனைவரும் வந்து சேர்ந்ததும், குரவைக் கூத்து ஆடும் பெண்கள் ஒன்பது பேர் மேடைக்கு வருவார்கள். இந்த ஆட்டத்திற்குத் ஏற்றவாறு உடம்புடன் ஒட்டிருக்கும் ஆடை அணிந்து, உடம்போடு சேர்ந்திருக்கும் ஆபரணங்களைப் பூண்டு, கால்களில் சிலம்பு அணிந்து, கண்ணி, கடம்பம், காந்தள், குறிஞ்சி, செவ்வலரி ஆகிய முருகனுக்கு உகந்த மலர்களை அவர்கள் சூடியிருந்தார்கள். மேற்கூறிய மலர்களினால் கதம்பமாகத் தொடுத்த ஒரு நீண்ட மலர் மாலையினால் ஒருவரையொருவர் பிணைத்துக் கொண்டவாறு, அவர்கள் மேடையில் வந்து நின்றார்கள். சிலர் கைகளில் சந்தன மரத்தினால் செய்து வர்ணம் கொடுத்த அழகிய பச்சைக் கிளிகளை லாவகமாக ஏந்திக் கொண்டிருந்தார்கள்".
இந்த நிகழ்வுகள் எல்லாம் அரங்கேறிய பின்னர் மக்களை மகிழ்விக்குமாறு பாடிக் கொண்டே ஆடி மகிழ்வார்கள். அப்படி எதைப் பற்றி பாடுவார்கள் என்றால், "சபையோருக்கு வணக்கம் செய்துவிட்டுப் பாடவும் ஆடவும் தொடங்கினார்கள். முருகனுடைய புகழைக் கூறும் பாடல்களைப் பாடினார்கள். முருகனுடைய வீரச் செயல்களைப் பாடினார்கள். சூரபத்மன், கஜமுகன் முதலிய அசுர கணங்களைக்கொன்று, கடல் நீரை வற்றச் செய்த வெற்றிவேலின் திறத்தைப் பாடினார்கள். இத்தகைய பாடலும் ஆடலும் பறை ஒலியும் குழல் ஒலியுமாகச் சேர்ந்து பார்த்திருந்தவர்களையெல்லாம் வெறிகொள்ளச் செய்தன" என்று மிகவும் அழகாக சித்தரித்து குறிப்பிட்டுள்ளார் கல்கி.
இன்னும் விரிவாக அந்த நாவல் குறிப்பிடுவது என்ன வென்றால், இந்த ஆட்டம் முடிந்த பின்னர், தேவராளன் ஆட்டம் ஆட ஆணும் பெண்ணும் மேடையேறியதையாகவும், ஆண் அரச குடும்பத்தில் பலி கேட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த குரவைக் கூத்து ஆட்டம் பண்டைய காலத்தில் பொழுதுபோக்கிற்காகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. பின்னர் போர்க்காலங்களிலும், மக்களை பேராபத்து சூழும் காலத்திலும் ஆடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நம் ஊருக்கு எந்த ஆபத்தும் இல்லாத நேரத்தில் ஆடபப்டும் ஆட்டத்திற்கு பெயர் "தண்குரவை" ஆகும்.
தமிழ் மொழியின் இலக்கியத்தில் குரவைக்கூத்து, தொற்றியாடல், தண்குரவை, அபிதான சிந்தாமணி என்று பல பெயர்களில் விளக்கமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இன்னும் கூடுதலாக இதற்கு "தழூஉ" என்னும் பெயரும் உள்ளது. ஆணும் பெண்ணும் தழுவிக்கொண்டு ஆடுவதை மையப்பொருளாக கொண்டு உருவான வார்த்தை தான் இது. இப்பொழுது தெரிகிறதா தமிழின் அழகு என்னென்னு. இப்படியாக நம் தமிழின் சங்க இலக்கியத்தில் பெருமை படுத்தப்பட்ட ஒரு ஆட்டத்திற்கான பாடல் வரிகளை கம்பீரமாக எழுதியிருக்கிறார் படத்தின் பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…