Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

சோழர்களுக்கு நிகழப்போவதை முன்பே கணித்த கலாச்சாரம்...மிரளவைக்கும் உண்மைகள்!

Priyanka Hochumin September 29, 2022 & 21:30 [IST]
சோழர்களுக்கு நிகழப்போவதை முன்பே கணித்த கலாச்சாரம்...மிரளவைக்கும் உண்மைகள்!Representative Image.

அமரர் கல்கி எழுதி தற்போது உலக மக்களின் கவனத்தை ஈர்த்த பொன்னியின் செல்வன் கதையை ஒரு காவியமாக உருவாக்கியுள்ளார் மணிரத்னம் அவர்கள். அதில் தமிழ் மீது நமக்கு இருக்கும் மதிப்பையும் மரியாதையையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் வகையில் இசையமைத்துள்ளார் ஏ.ஆர். ரஹ்மான் அவர்கள். அதில் வந்தியத் தேவனின் அறிமுகம், ஆதித்த கரிகாலனின் அறிமுகம், வானதி குந்தவை நட்பு, குந்தவை வந்தியத்தேவன் சந்திப்புக்கான களம், பூங்குழலி அறிமுகம், அரச குடும்ப பலி என்று கதையின் முக்கிய பகுதியில் மொத்தம் 6 பாடல்கள் இயற்றியுள்ளார். நீங்கள் கூர்ந்து கவனித்து பார்த்தால், இந்த அனைத்து பாடலும் முற்றிலும் வேறுபட்டிருக்கும். மனிதனின் இயல்புகளை தெரிவிக்கும் விதமாக ஒவ்வொரு பாடலும் இருப்பது இந்த படத்தின் கூடுதல் பலமாகும்.

அதிலும் இந்த "தேவராளன் ஆட்டம்" பாடல் வெளியானதும் நிறைய பேர் அது என்ன என்று புரியாமல் கிண்டல் செய்தனர். ஆனால் அதில் இருக்கும் உள்ளர்த்தம் மற்றும் உணர்ச்சிகளை பாடல் வரிகளிலையே கொண்டு வருவது என்பது சாத்தியமற்றது. ஆனால் இந்த பாடல் அதனை முறியடித்துள்ளது. ஒருவேளை புரியாதவர்களுக்கு அந்த பாடலின் அர்த்தம் இதோ.

சோழர்களுக்கு நிகழப்போவதை முன்பே கணித்த கலாச்சாரம்...மிரளவைக்கும் உண்மைகள்!Representative Image

டம் டம் டம் டம் டம் டமரே....

பாடல் ஆரம்பிக்கும் போது அமைதியாக இருந்தாலும், கொஞ்சம் போக போக பாடல் கேட்பவர்களுக்கு சோழ தேசத்துக்கு நிகழப்போகும் பேராபத்தின் இழப்பை உணர்த்தும் வகையில் சூழ்ச்சி, தந்திரம், காழ்ப்புணர்ச்சி, விரோதம், பகைமை, அருள்வாக்கு, பலிகேட்டலின் உக்கிரம் என அனைத்து விதமான உணர்வுகளையும் இந்த ஓரே பாடலில் அனுபவிக்க வைத்திருக்கிறார். இந்த மேஜிக்கை வேற யாரால் செய்ய முடியும் சொல்லுங்க.

இதற்கு பின்னர் "செக் செக் செக் செக் செக்செக் செக் செக் செக் செக்செக் செக் செக செகபணசெக் செக் செக செகபணசெக் செக் செக் செக் செக்செக் செக் செக செகபணபொட் பொட் பொட் பொட்பொட் பொட் பொட் பொட்பொட் பொட் பொட் பொட்பட் பட் பட் பட் பட் பட்பட் பட் பட் பட் பட் பட்பட் பட் பட் படவெனபட் பட் பட் படவெனபட் பட் பட் படவெனபட் பட் பட் படவென" என்னும் வரிகளை கேட்கும் போது நம்மை அறியாமல் ஒரு விதமான அச்ச உணர்வு ஏற்படும்.

சோழர்களுக்கு நிகழப்போவதை முன்பே கணித்த கலாச்சாரம்...மிரளவைக்கும் உண்மைகள்!Representative Image

எதை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது......

இந்த பாடல் "Monkey Chant" எனப்படும் இந்தோனேசியாவின் வழிபாட்டு வகை பாடலை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டது. கேட்பவர்களுக்கு உணர்வுபூர்வமாக இருக்க வேண்டும் என்னும் காரணத்தால் இசை கருவிகளை பயன்படுத்தாமல் பாடுபவர்களின் குரல்களை மட்டும் கொண்டு பதிவு செய்யப்பட்ட பாடல் இது. இதனை தொடர்ந்து சோழர்களுக்கு என்ன நிகழப்போவது என்பதை உணர்த்தும் வகையில் இருக்கும் பாடல் வரிகள்.

ஊன் பற்ற கேட்ட உடலை
வாள் பெற்று கெட்டழிக்கவே (3)

சூடானது சூடானது சூடானது யுத்தம்
சூடானது சூடானது சூடானது ரத்தம்

போராடுது போராடுது போராடுது சித்தம்
தீராதது தீராதது தீராதது வெறிச்சத்தம்

சூடானது சூடானது சூடானது யுத்தம்
சூடானது சூடானது சூடானது ரத்தம்

போராடுது போராடுது போராடுது சித்தம்
தீராதது தீராதது தீராதது வெறிச்சத்தம்

சோழர்களுக்கு நிகழப்போவதை முன்பே கணித்த கலாச்சாரம்...மிரளவைக்கும் உண்மைகள்!Representative Image

விரோதம்…

கொத்துப்பறை கொத்துப்பறை
கொத்துப்பறை கொட்டு
ரத்தசெறு ரத்தசெறு
ரத்தசெறு வெட்டு 

சோழர்களுக்கு நிகழப்போவதை முன்பே கணித்த கலாச்சாரம்...மிரளவைக்கும் உண்மைகள்!Representative Image

பகைமை…

கொட்ட பகை கொட்ட பகை
கொட்ட பகை வெட்டு
துட்டச்செயல் துட்டச்செயல்
துட்டச்செயல் கட்டு

செறுவேட்டலை பேசிடுதே
மனுக்கேட்டுனை ஓதிடுதே
ஒரு தாட்சிணி தீயுடனே
அதை ஆற்றிடவா பேயனே

சோழர்களுக்கு நிகழப்போவதை முன்பே கணித்த கலாச்சாரம்...மிரளவைக்கும் உண்மைகள்!Representative Image

முருகனை போற்ற....

செங்குருதி சேயோனே
வங்கொடிய வேலோனே
செவ்வலறி தோளோனே
என் குடிய காப்போனே

கடம்பா இடும்பா முருகா
கதிர்வேல் குமரா மருதா
துடிவேல் அரசர்க்கரசே
வடிவேல் அருள்வாய் மலர்வாய்

சோழர்களுக்கு நிகழப்போவதை முன்பே கணித்த கலாச்சாரம்...மிரளவைக்கும் உண்மைகள்!Representative Image

அருள்வாக்கு கேட்க...

மாமழை பெய்திடுமா
மாநிலம் ஓங்கிடுமா
ஒப்புகழி தாங்கிடுமா
கைகளும் ஓங்கிடுமா

வருண்டா கோடடா எடுடா
வருவாய் தருவாய் உடனே
செக செக செக செகவென
செந்நிற குருதியை கொட்டு

சோழர்களுக்கு நிகழப்போவதை முன்பே கணித்த கலாச்சாரம்...மிரளவைக்கும் உண்மைகள்!Representative Image

பலி கேட்க....

கொட்டுப்பறை கொட்டெழுந்திட
சுட்டுப்பகை கெட்டழிந்திட
கொச்சக்குடி பட்டதொருவனின்
ரத்தத்தினை கொட்டி பலியிடு
சுட்ட பலி கேட்டாள் சங்கரி
ரத்தத்தினை கொட்டி பலியிடு

வேந்தன் குடி கேட்டாள் பூதவி
ரத்தத்தினை கொட்டி பலியிடு
இளையோன் தலை கேட்டாள் பைரவி
ரத்தத்தினை கொட்டி பலியிடு

எனவே தமிழர்களின் பெருமையை இசையாக நமக்கு கொடுத்த இந்த படத்தை அணுஅணுவாக ரசித்து நாம் தமிழர் என்று பெருமை படுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்