எழுத்தாளரும் பத்திரிகையாளருமான கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவல் கல்கி வார இதழில் 1950ஆம் ஆண்டில் துவங்கி சுமார் ஐந்தாண்டுகள் தொடராக வெளிவந்த ஒரு பிரம்மாண்டமான படைப்பு. புது வெள்ளம், சுழல்காற்று, கொலைவாள், மணிமகுடம், தியாக சிகரம் என 5 பாகங்களையும் 300க்கும் மேற்பட்ட அத்தியாயங்களையும் கொண்டது. கல்கி இதழில் 1950 அக்டோபர் 29ஆம் தேதி இந்தத் தொடர் துவங்கியது.
தமிழில் மிகவும் பிரபலமான காவியத்தை மணிரத்னம் எத்தனையோ ஆண்டுகளுக்கு பிறகு படமாக எடுத்திருக்கிறார். அந்தவகையில், வரும் 30 ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாக உள்ள இந்த படத்திற்காக ஒட்டுமொத்த உலகமே காத்துக்கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், பிரம்மாண்டாக உருவான இப்படத்தில் எத்தனையோ நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். கதை எதுவும் தெரியாமல் எடுத்தவுடன் படத்தை பார்ப்பதற்கு சற்று புரியாமல் போகலாம். அதற்காக தான் இந்த பதிவு. வரலாற்று காவிய நாவல் பொன்னியின் செல்வன் முழு கதையும் சுருக்கமாக சுவாரஸ்யமாகவும் பார்க்கலாம்.
அருள்மொழி வர்மரை தான் கதையில் பொன்னியின் செல்வன் என்று சொல்வார்கள். இதே அருள்மொழி வர்மர் தான் பிற்காலத்தில் இராஜராஜ சோழனாக அழைக்கப்பட்டவர். பொன்னியின் செல்வன் என்றால் பொன்னியின் மகன் என்று அர்த்தம். ஐந்து வயதான அருண்மொழி தவறுதலாக பொன்னி நதியின் வீழுந்து விடுகிறான். இவனை காப்பாற்ற, அந்த பொன்னி நதியே காப்பாற்றியதால், அருண்மொழிக்கு பொன்னியின் செல்வன் என பெயர் சூட்டப்பட்டது.
வழக்கமாக நாம் படித்த கதைகளில் இல்லாத அளவிற்கு பொன்னியின் செல்வன் படத்தில் எக்கச்சக்கமான கேரைக்டர்கள் இருப்பார்கள். கிட்டத்தட்ட 40 க்கும் மேற்பட்ட முக்கியமான கேரைக்டர் இருப்பார்கள். அதனால், முதலில் இந்த கதையில் வரக்கூடிய கேரைக்டர் பற்றி தெரிந்துக் கொண்டாலே குழப்பம் இல்லாமல் இந்த படத்தை பார்க்க முடியும்.
இந்த பொன்னியின் செல்வன் கதை 10 ஆம் நூற்றாண்டில் நடந்தது. இந்த கதைக்களத்தில் சோழர்களோட அரசனாக சுந்தர சோழர் (பிரகாஷ்ராஜ்) இருப்பார். சுந்தர சோழரோட மனைவி தான் வானவன் மாதேவி (வித்யா சுப்ரமணியன்). இந்த சுந்தர சோழருக்கும் வானவன் மாதேவிக்கும் மூன்று பிள்ளைகள் இருப்பார்கள். மூத்தவர் ஆதித்த கரிகாலன் (விக்ரம்), மகள் குந்தவை (திரிஷா), இளையவர் அருள்மொழி வர்மர் (ஜெயம் ரவி).
சுந்தர சோழருடைய பெரியப்பா தான் கண்டராதித்தர். இவருடைய மனைவி தான் செம்பியன் மாதேவி (ஜெயசித்ரா). கண்டராதித்தர் மற்றும் செம்பியன் மாதேவியின் ஒரே மகன் மதுராந்தகன். கண்டாதித்தர் ராஜாவாக இருந்த காலக்கட்டத்தில் அவருடைய மகன் கைக்குழந்தையாக இருந்ததால், சுந்தர சோழரையே அடுத்த சோழநாட்டோட அரசாக பொறுப்பேற்றார்.
அதே சமயத்தில் சுந்தர சோழரோட ஆட்சிக்குப் பிறகு அவருடைய வாரிசுகள் தான் பதவி ஏற்க வேண்டுமென்றும், தன்னோட மகனுக்கு நாடாளும் ஆசை வரக்கூடாது என்பதற்காகவும் மதுராந்தகனை முழுக்க முழுக்க சிவப்பக்தனாகவே வளர்க்க வேண்டுமென்றும், தன்னோட மனைவி செம்பியன் மாதேவியிடம் சொல்லிவிட்டு இறந்துவிடுகிறார் கண்டராதித்தர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…