Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,852.94
114.49sensex(0.16%)
நிஃப்டி22,402.40
34.40sensex(0.15%)
USD
81.57
Exclusive

பொன்னியின் செல்வன்.. யார் இந்த பெரிய பழுவேட்டரையர்?

Nandhinipriya Ganeshan September 28, 2022 & 20:30 [IST]
பொன்னியின் செல்வன்.. யார் இந்த பெரிய பழுவேட்டரையர்?Representative Image.

பொன்னியின் செல்வன் முழுக் கதை - 1...

எழுத்தாளரும் பத்திரிகையாளருமான கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவல் கல்கி வார இதழில் 1950ஆம் ஆண்டில் துவங்கி சுமார் ஐந்தாண்டுகள் தொடராக வெளிவந்த ஒரு பிரம்மாண்டமான படைப்பு. புது வெள்ளம், சுழல்காற்று, கொலைவாள், மணிமகுடம், தியாக சிகரம் என 5 பாகங்களையும் 300க்கும் மேற்பட்ட அத்தியாயங்களையும் கொண்டது. கல்கி இதழில் 1950 அக்டோபர் 29ஆம் தேதி இந்தத் தொடர் துவங்கியது.

தமிழில் மிகவும் பிரபலமான காவியத்தை மணிரத்னம் எத்தனையோ ஆண்டுகளுக்கு பிறகு படமாக எடுத்திருக்கிறார். அந்தவகையில், வரும் 30 ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாக உள்ள இந்த படத்திற்காக ஒட்டுமொத்த உலகமே காத்துக்கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், பிரம்மாண்டாக உருவான இப்படத்தில் எத்தனையோ நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். கதை எதுவும் தெரியாமல் எடுத்தவுடன் படத்தை பார்ப்பதற்கு சற்று புரியாமல் போகலாம். அதற்காக தான் இந்த பதிவு. வரலாற்று காவிய நாவல் பொன்னியின் செல்வன் முழு கதையும் சுருக்கமாக சுவாரஸ்யமாகவும் பார்க்கலாம். 

பொன்னியின் செல்வன்.. யார் இந்த பெரிய பழுவேட்டரையர்?Representative Image

சோழர்களோட ஆட்சிக்காலத்தில் சோழர்களை பாதுகாக்கும் பொறுப்பு பழுவேட்டரையர்களுடையது. பரம்பர பரம்பரையாக இந்த பழுவேட்டரையர்கள் விசுவாத்தோட சிறப்பாக பண்ணிட்டு வருவதால், அரசர்களுக்கு அடுத்தப்படியாக பழுவேட்டரையர்கள் தான் இருப்பார்கள். ஆட்சியின் போது மிக முக்கிய பல பொறுப்புகளை அவர்களிடம் ஒப்படைத்திருப்பார்கள். நம்ம கதை நடைக்கும் நேரத்தில் 2 பழுவேட்டரையர்கள் இருப்பார்கள். பெரிய பழுவேட்டரையர் (சரத் குமார்) மற்றும் அவருடைய தம்பி சின்ன பழுவேட்டரையர் (பார்த்திபன்). பழுவேட்டரையர்களுக்கு அடுத்ததாக வேளார் பரம்பரை இருப்பார்கள். இவர்கள் சோழர்களோட போர் சேனாதிபதி பொறுப்பில் இருப்பார்கள். 

பொன்னியின் செல்வன்.. யார் இந்த பெரிய பழுவேட்டரையர்?Representative Image

சுந்தர சோழர் ஆட்சி காலத்தில் 2 வேளார் இருப்பர், ஒருவர் பெரிய வேளார் பூதி விக்ரம் கேசரி (பிரபு) மற்றும் அவருடைய தம்பி சின்ன வேளார். சின்ன வேளார் ஒரு போரில் வீர மடைந்துவிடுகிறார். பின்னர், சின்ன வேளாருடைய மகள் தான் வானதி (சோபிதா துலிபலா). சின்ன வயதிலேயே தந்தையை இழந்த வானதி அப்போதிலிருந்தே இளவரசி குந்தைவோடு தான் வளருகிறார். குந்தவையும் வானதியும் நெருங்கிய தோழிகளாக இருப்பார்கள். பெரிய வேளார் பூதி விக்ரம் கேசரி வானதியை எப்படியாவது அருள்மொழி வர்மருக்கு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என்ற ஒரு ஆசையும் இருக்கும். 

பொன்னியின் செல்வன்.. யார் இந்த பெரிய பழுவேட்டரையர்?Representative Image

இந்த கதையில் அடுத்ததாக பார்க்க வேண்டிய அடுத்த முக்கியமான கேரைக்டர் அரசவையோட முதல் மந்திரி ஹிருத்த பிரம்மராயர். ரொம்ப புத்திசாலியான இவரை கேட்டு தான் அரசரே நிறைய முக்கியமான முடிவுகளை எடுப்பாரு. அதுமட்டுமல்லாமல், சோழ நாட்டுல இவருக்கு தெரியாமல் எதுவுமே நடக்காது. எங்கே எது நடந்தாலும் இவருக்கு தெரிந்துவிடும், அந்த அளவிற்கு சோழ நாடெல்லாம் இவருக்கு கண் என்று சொல்வார்கள். இதற்கு முக்கியமான காரணம் இவரோட ஒற்றன் ஆழ்வார்க்கடியான் நம்பி (ஜெயராம்). பொன்னியின் செல்வன் கதையில் மிக முக்கியமான கேரைக்டர் இந்த நம்பி. இவரை பற்றி படம் பார்க்கும்போது உங்களுக்கே புரியும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்