பொன்னியின் செல்வன் முழுக் கதை - 2...
சுந்தர சோழரோட கொள்ளு தாத்தா விஜயாலய சோழன் அப்போ நடந்த போரில் பாண்டியர்களை வீழ்த்தி சோழ சாம்ராஜ்ஜியத்தை விரிவுப்படுத்திருபாரு. இவருடைய ஆட்சிக்காலத்தில் தான் சோழ அரசு தமிழ்நாடெல்லாம் நிலைநாட்டியிருந்தது. இதானலையே, மறுபடியும் விட்டதை பிடிக்க பாண்டியர்கள் அடிக்கடி சோழர்களோடு போர் நடத்தி அதில் தோல்வியும் அடைந்தார்கள். சுந்தர சோழர் காலத்தில் பாண்டியர்களோட அரசனாக வீரப்பாண்டியன் (நாசர்) இருப்பாரு.
இந்த வீரப்பாண்டியன் ஒருமுறை சோழர்களோட நடந்து போரில் சுந்தர சோழரோட அப்பாவையும் சித்தப்பாவையும் சதி செய்து தலையை வெட்டிருப்பாரு. இதனாலையே, வீரப்பாண்டியனை எப்படியாவது பலிவாங்கி அவனோட தலையை வெட்டியே ஆக வேண்டும் என்ற சபத்தோடையும் வெறியோடையும் இருப்பாரு சுந்தர சோழரோட மூத்த மகன் ஆதித்த கரிகாலன். இதனாலையே, ஆதித்த கரிகாலன் அவருடைய சின்ன வயதிலிருந்தே அவருடைய அம்மா வழி தாத்தாவான மலையமானோட (லால்) நிறைய போர்களுக்கு சென்று நிறைய கற்றுக்கொண்டு போர்க்கலங்களில் வெற்றியை குவித்திருப்பாரு.
ஆதித்த கரிகாலன், தங்கை குந்தவை, தம்பி அருள்மொழி தேவர் மூவருமே சின்ன வயதில் இருந்து செம்பியன் மாதேவிக்கிட்ட வளர்ந்திருப்பார்கள். அப்போது ஆழ்வார்க்கடியான் நம்பிக்கு 20 வயது இருக்கும். அவங்க குடும்பம் ஒரு பெண்ணை தத்தெடுத்து வளர்ப்பார்கள்.
அந்த பொன்னு தான் நந்தினி. சின்ன வயசுலியே நந்தினி (சாரா அர்ஜூன்) அழகுனா அழகு அப்படியொரு அழகு. ஒருநாள் ஆழ்வார்க்கடியான் நம்பியோட நந்தினியை பார்த்த செம்பியன் மாதேவி நந்தினியை அழைத்து வந்து ஆதித்த கரிகாலன் மற்றும் குந்தவை கிட்டயும் நந்தினியை விளையாட சேர்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லுவார். ஆனால், நந்தினியை குந்தவைக்கு பிடிக்கவில்லை.
ஆனால், ஆதித்த கரிகாலன் நந்தினியோட அழகில் அப்பவே மயங்கிவிடுவார். கொஞ்சம் வருடத்திற்கு பிறகு ஆதித்த கரிகாலனுக்கும், நந்தினிக்கும் காதல் வருது, இது தெரிந்த செம்பியன் மாதேவி இது சரிவராது என்று ஆதித்த கரிகாலனை எச்சரிப்பார். அதேநேரத்தில் பாண்டியர்களோட ஒரு போர் வர தன்னுடைய தந்தையோட ஊரைவிட்டே கிளம்பிடுவாரு ஆதித்த கரிகாலன். கிட்டத்தட்ட 2 வருடத்திற்கு பிறகு போர் முடிந்து திரும்பி வந்து பார்க்கும்பொழுது நந்தினி அங்கு இல்லை.
இந்த சமயத்தில் சுந்தர சோழருக்கு உடம்பு முடியாமல் போய் ஒரு கையும் காலும் வராமல் படுத்த படுக்கையாகிடுவாரு. அப்போது மறுபடியும் பாண்டியர்களோடு ஒரு போருக்கு மலையமானோட கிழம்புராரு ஆதித்த கரிகாலன். இதே நேரத்தில் இலங்கையில் ஒரு போர் வர அதற்கு பெரிய வேளாரோடு அருள்மொழி தேவர் செல்கிறார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…