Sun ,Apr 02, 2023

சென்செக்ஸ் 57,794.75
181.03sensex(0.31%)
நிஃப்டி17,012.25
60.55sensex(0.36%)
USD
81.57
Exclusive

பொன்னியின் செல்வன் படத்தின் வில்லி யார்?

Nandhinipriya Ganeshan September 29, 2022 & 13:17 [IST]
பொன்னியின் செல்வன் படத்தின் வில்லி யார்?Representative Image.

பொன்னியின் செல்வன் முழுக் கதை - 3

குந்தவை தான் அருள்மொழி வர்மனுக்கு எல்லாமே. புத்தியாசாலியான தன்னோட சகோதரி எது சொன்னாலும் தட்டாமல் செய்யும் குணம்படைத்தவர். தன்னோட இரண்டு சகதோதரர்களும் போருக்கு போல குந்தவையும் செம்பியன் மாதேவியோடும் வானதியோடும் பழையாறையிலேயே இருப்பாங்க. பாண்டியர்களோட போருக்கு போக தன்னோட நண்பனான பார்த்திபேந்திரனையும் உடன் அழைத்துக்கொண்டு செல்வார் ஆதித்த கரிகாலன். அப்போது அந்த போரில் ஒரு கட்டத்திற்கு பின் சோழர்களை எதிர்த்து நிற்க முடியாமல் தலைதெறித்து ஓடுறாங்க பாண்டியர்கள். இதில் ஆதித்த கரிகாலன் இவ்வளவு நாட்களாக பழிவாங்க துடித்துக்கொண்டிருந்த வீரபாண்டியனும் ஒன்று. தரையில் இரத்த கரை சிந்தியிருக்கிற திசையை நோக்கி ஒரு காட்டுக்குள் ஓடிவரும் ஆதித்த கரிகாலன், அங்கு ரொம்ப நாட்களுக்கு முன்னாடி பார்த்த பேரழகி நந்தினியை பார்த்து அதிர்ச்சியடைகிறார். நந்தினியை பார்த்தவுடனே அவருடைய காதலும் மோகமும் பலமடங்காக அதிகரிக்கிறது. ஆனால் வந்த வேலையை பார்க்க வேண்டும் என்று திரும்பி வீரபாண்டியனை தேடி போகும்போது இரண்டு நாட்களுக்கு பிறகு ஒரு குடிசைக்குள் இருக்கிற மாதிரி சந்தேகம் வர கதவை திறந்து உள்ளே போக, அங்கு அவர் பார்த்த காட்சி தூக்கிவாறி போடுகிறது. 

பொன்னியின் செல்வன் படத்தின் வில்லி யார்?Representative Image

அந்த இடத்துல வீரபாண்டியன் இரத்த காயத்தோட படுத்துட்டு இருக்க, அவருக்கு தண்ணீர் கொடுத்துட்டு இருக்காங்க நந்தினி. உடனே ஆதித்த கரிகாலன் உனக்கு வீரபாண்டியன் என்ன உறவு என்று கோபத்துடன் கேட்க, அதற்கு நந்தினி தன்னோட காதலனை ஒன்றும் செய்துவிடாதீங்க என்று கேட்டு அழுகிறார். இதை கேட்டு ஆதித்த கரிகாலனுக்கு கோபம் இன்னும் பலமடங்காக அதிகரிக்க, எதுவும் யோசிக்காமல் கையில் இருந்த வாளை எடுத்து வெறியோட ஒரே வெட்டா பாண்டியனோட தலையை வெட்ட, தலை துண்டாகிவிடுகிறது. பின்னர், அந்த தலையை தூக்கிகிட்டு அழுதுக்கொண்டிருக்கும் நந்தினியை கண்டுக்கொள்ளாமல் வெளியேறுகிறார் ஆதித்த கரிகாலன்.

திரும்பவும் ஒரு நந்தினியை தேடி அதே குடிசைக்கு வரும்போது, அங்கு நந்தினி இல்லை. கடைசியாக அவர விட்டுவிடுங்க என்று நந்தினி கெஞ்சி அழுத காட்சி  ஆதித்த கரிகாலன் நெஞ்சில் ஆராத புண்ணாக மாறுவிட்டது. இந்த சமயத்தில் நந்தினி பாண்டியர்களோட ஆபத்து உதவி படையை பார்க்கிறார். இந்த படையில் முக்கிய 4 பேரு இருப்பார்கள். 
 

பொன்னியின் செல்வன் படத்தின் வில்லி யார்?Representative Image

தலைவன் ரவிதாசன், தம்பி சோமன் சம்பவன், தேவரானன் மற்றும் இரும்பன்காரி. பின்னர், நந்தினி வீரபாண்டியன் இறந்ததை கூற இதை கேட்டு அதிர்ச்சியடைகிறார் ரவிதாசன். வீரபாண்டியனை கொலை செய்யும் வரை நீ என்ன செய்துக்கொண்டிருந்தாய் என்று ரவிதாசன் நந்தினி பார்த்து கேட்க, அதற்கு ஆதித்த கரிகாலனை நான் தான் பழிவாங்க போறேன், அவன் தலையை நான் எடுத்துட்டு வரேனு சபதம் எடுக்கிறார் நந்தினி. அந்தவகையில், சோழர்களை அழிக்க நந்தினி எடுக்கும் ஆயுதமே அவளுடைய அழகு. 

அந்த அழகை பயன்படுத்தி வயதானவர் என்று கூட பார்க்காமல் 64 வயதான பெரிய பழுவேட்டரையரை தன்னோட மோக வலையில் விழவைத்து கல்யாணம் செய்து சோழ அரண்மனைக்குள்ள காலடி எடுத்து வைக்கிறாங்க நந்தினி. இதற்கு அப்பறம் ஆதித்த கரிகாலனுக்கு இளவரசர் பட்டம் சூட்டப்படுகிறது. ரொம்ப நாட்களுக்கு பிறகு அந்த விழாவில் தான் நந்தினி அங்கியிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறார் ஆதித்தன். 

பொன்னியின் செல்வன் படத்தின் வில்லி யார்?Representative Image

இப்படி வயதான ஒருவரை திருமணம் பண்ணிக்கிட்டியே என்று கேட்டுவிட்டு, இப்பவும் என்னோட வந்துவிடு நாம் இருவரும் எங்கையாவது போய்விடலாம் என்று கேட்கிறார் ஆதித்தன். அதற்கு நந்தினி பழுவேட்டரையர்களை இரண்டு பேரையும் கொன்னுட்டு, உங்க அப்பாவை சிறைப்படுத்திவிட்டு என்னை கூப்பிடுங்கள் நான் வரேனு சொல்ல, இதை கேட்ட ஆதித்த கரிகாலன் கோபபட்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.

சில நாட்களுக்குபிறகு, சோழ அரண்மனையில் இருந்துக்கொண்டு பழுவேட்டரையர்களை தன்னோட மோக வலையில் விழவைத்து, அவர்களுக்கு தெரியாமலேயே, சோழ கஜானாவில் இருந்து பொற்காசுகளை கொஞ்சம் கொஞ்சமாக பாண்டியன் ஆபத்து உதவி படைக்கு கொடுத்துவிடுகிறார் நந்தினி. இதே நேரத்தில் சோழர்களுக்கு எதிராக நிறைய திட்டங்களையும் போடுறாங்க. இந்த நேரத்தில், பாண்டியர்களுக்கு அடுத்தப்படியாக சோழர்களுக்கு விரோதிகளான இராஸ்டிரகூலர்களோட போர் புரிய காஞ்சிக்கு செல்கிறார் ஆதித்த கரிகாலன். 
 

பொன்னியின் செல்வன் படத்தின் வில்லி யார்?Representative Image

இந்த சமயத்தில் தான் நம்ம கதையோட முக்கியமான கேரைக்டரான வள்ளத்து இளவரசன் வந்திய தேவனை பார்த்து அவரை தன்னோட நண்பனாக்கிக் கொள்கிறார் ஆதித்தர். இந்த போர் முடிந்த பிறகு, காஞ்சியில் ஒரு பெரிய பொன் மாளிகையை கட்டிமுடிக்கிறார் ஆதித்தர். இந்த நேரத்தில் தான் நந்தினியோட பேச்சை கேட்டு பழுவேட்டரையர்கள் சுந்திர சோழரை கைதிபோல் நடத்தப்படுவதாக கேள்விப்படுகிறார் ஆதித்தர். 

இதைப்பற்றி எப்படியாவது குந்தவைக்கிட்ட தெரியபடுத்தி அப்பாவையும் காஞ்சிபுரம் பொன் மாளிகைக்கு கூட்டிக்கொண்டு வரவேண்டும் என்று திட்டம்போட்டு, பழையாறையில் இருக்கின்ற குந்தைவைக்கு ஒரு ஓலையும், தஞ்சையில் இருக்கிற சுந்தர சோழருக்கும் ஒரு ஓலையும் எழுதி, இதை கொண்டுபோய் சேர்க்க வந்திய தேவன் கிட்ட கொடுத்து அனுப்புகிறார் ஆதித்தர். செல்லும்வழியில் யாரோடும் வீண் வம்புகளுக்கு போகக்கூடாது, முக்கியமாக பழுவேட்டரையர்கள்கிட்ட மாட்டிக்கொள்ள கூடாது என்று அறிவுரை கூறி அனுப்பி விடுகிறார். பொன்னியின் செல்வன் நாவலோட கதை இந்த வந்திய தேவனோட பயணத்தில் தான் ஆரம்பிக்கிறது. இவ்வளவு நேரம் நாம் பார்த்தது அனைத்தும் கதை நடுவில் அங்காங்கே வரும் முற்கால கதைகள் (flash back). ஆனால், வந்திய தேவனை வைத்து தான் முழுக்கதையுமே இதில் இருந்து தொடங்குகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்