Sat ,Apr 01, 2023

சென்செக்ஸ் 57,794.75
181.03sensex(0.31%)
நிஃப்டி17,012.25
60.55sensex(0.36%)
USD
81.57
Exclusive

வந்திய தேவனுக்கும் நந்தினிக்கும் என்ன சம்பந்தம்...? 

Nandhinipriya Ganeshan September 29, 2022 & 19:08 [IST]
வந்திய தேவனுக்கும் நந்தினிக்கும் என்ன சம்பந்தம்...? Representative Image.

பொன்னியின் செல்வன் முழுக் கதை - 5..

வந்திய தேவனிடம் உன்னோட வாழ்க்கையில் அடுத்த ஆறு மாதங்களுக்கு பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடைபெறும் என்று குழந்தை ஜோதிடர் சொல்கிறார். இதை கேட்ட வந்திய தேவன் எதுவும் புரியாமல், தஞ்சையை நோக்கி புறப்படுகிறான். செல்லும் வழியிலேயே முன்பு பார்த்த மூடுப்பல்லக்கை பார்க்கிறான் வந்திய தேவன்.

உடனே, உள்ளே மதுராந்தகன் தான் இருப்பான் என்று நினைத்துக்கொண்டு குதிரையை விட்டு பல்லக்கில் இடிக்க வைத்து அரண்மனைக்குள் நுழைந்து விடலாம் என்று எண்ணுகிறான். ஆனால், குதிரையை விட்டு இடிக்கும்போது அந்த பல்லக்கில் இருந்தது மதுராந்தகன் இல்லை நந்தினி. உடனே வந்திய தேவன் நந்தினியிடம் உங்க அண்ணன் ஆழ்வார்க்கடியான் நம்பி உங்களிடம் ஒரு ஓலையை கொடுக்க சொல்லி என்னிடம் கொடுத்துவிட்டார், அதை கொடுக்க தான் வந்தேன் என்று சொல்லி சமாளிக்கிறான். 

வந்திய தேவனுக்கும் நந்தினிக்கும் என்ன சம்பந்தம்...? Representative Image

அதற்கு நந்தினி அதெல்லாம் இங்கு பேச முடியாது, நீங்க என்னை அரண்மனையில் இருந்து வந்து பார்க்கும்படி கூறுகிறாள். பின்னர், ஒரு முத்திரை மோதிரத்தை கொடுத்து இதை அரண்மனையில் காட்டினால் உள்ளே விட்டுவிடுவார்கள் என்றும் சொல்கிறார். இதை வைத்து எப்படியாவது அரண்மனைக்குள்ளே சென்று சுந்தர சோழரை சந்தித்து விடலாம் என்று நினைக்கிறான். பின்னர் தஞ்சாவுருக்கு வந்ததும் அங்கிருக்கும் சேந்தன்அமுதன் என்ற ஒருவரிடம் பேசி பழகி நண்பாகிறார் வந்திய தேவன். சேந்தனமுதன் அன்று இரவு வந்திய தேவனை அவனுடைய வீட்டிற்கே அழைத்து சென்று இரவு தங்க வைத்துக்கொள்கிறான். அதற்கு வந்திய தேவனும் ஒப்புக்கொள்கிறான். அப்போது, சேந்தனமுதன் அவனுடைய முறைப்பெண் பற்றி வந்திய தேவனிடம் கலந்துக்கொள்கிறான். அடுத்த காலையிலேயே நந்தினி கொடுத்த மோதிரத்தை எடுத்துக்கொண்டு அரண்மனைக்குள் நுழைகிறான். 

வந்திய தேவனுக்கும் நந்தினிக்கும் என்ன சம்பந்தம்...? Representative Image

தஞ்சாவூர் முழுக்க முழுக்க சின்ன பழுவேட்டரையர் பாதுக்காப்பில் தான் இருக்கிறது. உள்ளே போன வந்திய தேவனை பிடித்து விசாரணை நடத்துகிறார் சின்ன பழுவேட்டரையர். அப்போது, தான் வானர்குலத்து இளவரசன் வந்திய தேவன் என்றும், சுந்தர சோழரிடம் ஆதித்த கரிகாலன் கொடுத்த ஓலையை கொடுக்க வந்ததாகவும் தெரிவிக்கிறான். அப்போது, வந்திய தேவன் வைத்திருந்த மோதிரத்தை பார்த்து இது எப்படி உனக்கு கிடைத்தது என்று சின்ன பழுவேட்டரையர் கேட்க, உங்க அண்ணன் பெரிய பழுவேட்டரையர் தான் இதை கொடுத்தார் என்று சொல்லி நம்ப வைக்கிறான் வந்திய தேவன். 

வந்திய தேவனுக்கும் நந்தினிக்கும் என்ன சம்பந்தம்...? Representative Image

பின்னர், ஒருவழியாக சுந்தர சோழரிடம் ஓலையை கொடுத்துவிட்டு, ஆதித்த கரிகாலன் உங்களுக்காக காஞ்சியில் பொன் மாளிகை கட்டியிருப்பதாகவும், அதற்கு உங்களை வர சொல்வதாகவும் கூறுகிறான். வந்திய தேவனை சுந்தர சோழருக்கு பிடித்துப்போய், இந்த மாதிரியான நண்பர் என் மகன் ஆதித்த கரிகாலனுடன் இருக்கையில் அவனுக்கு எந்த ஆபத்தும் நேராது என்று சொல்கிறார் சுந்தர சோழர். இப்போது சம்புவரையர் அரண்மனையில் நடந்த சதிக்கூட்டத்தை பற்றி சொல்ல ஆரம்பிக்கிறார் வந்திய தேவன். 

ஆனால், அந்த சமயத்தில் சின்ன பழுவேட்டரையர் அங்கே வந்துவிடுகிறார். உடனே வந்திய தேவன் சமாளித்துவிட்டு கிளம்ப, நீ இப்போது கிளம்பக் கூடாது என்றும், இரண்டு நாள் இங்கே தங்கிவிட்டு பெரிய பழுவேட்டரையர் வந்ததும் பார்த்துவிட்டு தான் கிளம்ப வேண்டும் என்றும் சொல்லி காவலாளிகளிடம் கூட்டிக்கொண்டுபோய் விடுகிறார். 

வந்திய தேவனுக்கும் நந்தினிக்கும் என்ன சம்பந்தம்...? Representative Image

வசமாக மாட்டிக்கொண்ட வந்திய தேவன் காவலாளியை அடுத்துப்போட்டுவிட்டு, தப்பித்து ஓடும்போது நந்தினி இருக்கும் அறைக்கு சென்றுவிடுகிறான். நந்தினியோட அழகில் மயங்கி வந்திய தேவன் இங்க வந்த காரணத்தையும் சொல்லி ஓலையில் இருக்கின்ற விஷயத்தையும் உலரிவிடுகிறான். எல்லாவற்றையும் போட்டு வாங்கிவிட்ட நந்தினி, வந்திய தேவனிடம் நீ குந்தவையை பார்த்துவிட்டு மறுபடியும் என்னை வந்து பார்க்கும்படி கூறுகிறாள். அதற்கு வந்திய தேவனும் சரி சொல்லிவிட்டு அங்கிருந்து கிழம்பி விடுகிறான். அந்த நேரம் பார்த்து, நாம் முன்னாடி பார்த்த பாண்டியர்களோட ஆபத்து உதவி படை தளபதி ரவிதாசன் வரான். 

அப்போது, வந்திய தேவன் அங்கேயே இருந்துக் கொண்டு நந்தினியும், ரவிதாசனும் பேசுவதை ஒட்டுக்கேட்கிறான். அப்போது தான் நந்தினியோட சுயரூபமே வந்திய தேவனுக்கு தெரிய வர, இது தெரியாம நந்தினிகிட்ட எல்லாவற்றையும் சொல்லிவிட்டோமே என்று யோசித்துக் கொண்டே அரண்மனையோட சுரங்கப் பாதை வழியாக தப்பிக்க பார்க்கிறான் வந்திய தேவன். அந்தநேரம் பார்த்து அங்கு மதுராந்தகனும், கந்தமாறனும் வருகிறார்கள். அந்த இருட்டு அறையில், பழுவேட்டரையர், நந்தினி, மதுராந்தகர், கந்தமாறன் ஒன்றாக சேர்ந்து பேசுவதை தூரத்தில் இருந்து எதுவும் புரியாமல் பார்த்துக் கொண்டு இருக்கிறான் வந்திய தேவன்.

வந்திய தேவனுக்கும் நந்தினிக்கும் என்ன சம்பந்தம்...? Representative Image

வந்த வேலையை முடித்துவிட்டு மதுராந்தகனும், கந்தமாறனும் அங்கிருந்து கிளம்ப, அவர்களை பின்தொடர்ந்தால் சுரங்கப்பாதையோட முடிவு தெரிந்துவிடும் என்று வந்திய தேவன் நினைக்கிறான். அப்போது பார்த்து வழியில் ஒரு விபரீதம் நடக்குது. அதாவது, கந்தமாறனுடன் வந்த காவலாளி தன்னுடைய பெரிய கத்தியை வைத்து கந்தமாறனை தாக்க, உடனே வந்திய தேவன் அந்த காவலாளியை தாக்கிவிட்டு கந்தமாறனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று தோலில் தூக்கிக்கொண்டு பல சிரமங்களுக்கு பிறகு சேந்தனமும் வீட்டில் சேர்க்கிறான் வந்திய தேவன்.

சேந்தவனமுதனுடைய வாய் பேச முடியாத, காது கேட்காத அம்மா மருத்தும் செய்து கந்தமாறனை காப்பாற்றுகிறார். பிறகு, குந்தவைக்கு ஓலையை கொடுக்க கிளம்புகிறான் வந்திய தேவன். உயிர் பிழைத்த கந்தமாறன் தன்னை வந்திய தேவன் தான் குத்திவிட்டதாக நினைக்கிறான். பழுவேட்டரையரும் வந்திய தேவன் கந்தமாறனை குத்திவிட்டு தப்பிவிட்டதாக ஊர் மக்களை நம்பவைக்கிறார். ஒருவழியாக அங்கிருந்து தப்பித்து வந்த வந்திய தேவன் பழையாறை வந்து சேருகிறான்.

வந்திய தேவனுக்கும் நந்தினிக்கும் என்ன சம்பந்தம்...? Representative Image

அங்கு ஆழ்வார்க்கடியான் நம்பியோட அண்ணனை சந்தித்து இவரோட உதவியோட குந்தவையை சந்திக்கிறான். அப்போது தான் வந்திய தேவனுக்கு ஜோதிடர் வீட்டில் பார்த்த அந்த பொண்ணு தான் குந்தவை தான் தெரிய வருகிறது. பின் இருவருடைய மனதிலும் ஒரு உணர்வு ஏற்படுகிறது. அதன்பின், ஓலையை கொடுத்துவிட்டு கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் நடந்த சதி திட்டத்தை பற்றியும், தஞ்சாவூரில் இதுவரை நடந்த செய்திகளை பற்றியும் குந்தவையிடம் சொல்கிறான். அந்த ஓலையை குந்தவை படிக்கிறாள். அந்த ஓலையில் நீ ரொம்ப நாட்களாக ஒரு வீரனை சில வேலைகளை செய்து முடிக்க கேட்டாயே? இந்த வானர்குலத்து வீரன் தான் அதற்கு சரியானவன் என்று எழுதியிருந்தார் ஆதித்த கரிகாலன். 

வந்திய தேவனுக்கும் நந்தினிக்கும் என்ன சம்பந்தம்...? Representative Image

வந்திய தேவன் சதிக் கூட்டத்தை சொல்வதையெல்லாம் கேட்டு சோழநாட்டுக்கு வெளியில் மட்டுமல்ல உள்ளேயே நிறைய பகையாளிகள் இருக்கிறார்கள் என்று தெரிந்துக்கொள்கிறாள் குந்தவை. இவற்றையெல்லாம், இலங்கைக்கு போருக்காக சென்றுள்ள தன்னுடைய தம்பிகிட்ட சொல்லி அவரை இங்கு அழைத்துக் கொண்டு வரவேண்டும் என்று ஓலையை எழுதி வந்திய தேவன் கிட்ட கொடுத்து இலங்கைக்கு அனுப்பி வைக்கிறாள் குந்தவை.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்